அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கோழி இறைச்சிக்கான கட்டுபாட்டு விலையின் கீழ் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது எனக் கூறி ஹட்டன், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டுள்ள 495 ரூபாவிற்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது என இவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கோழி பண்ணை உரிமையாளர்களின் வரி நீக்கப்பட்டு, அவர்களுக்கான சலுகைகள்...
  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த ஜூன் 23-ம் திகதி லண்டன் நகரில் பிரிக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று கூறி வாக்களித்தனர். இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆன் லைன் மனுவில் 40 லட்சம் மக்கள் வலியுறுத்தி...
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால்,...
  சிம்புவின் திருமணம் எப்போது என்பதற்கு டி.ராஜேந்தர் புதிய பதிலளித்துள்ளார். அதுகுறித்த செய்திகளை கீழே பார்ப்போம்… இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சிம்பு தற்போது பெற்றோருக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிம்புவுக்கு பெண் தேடும் படலத்தை தீவிரமாக ஆரம்பித்துள்ளனர் சிம்புவின் பெற்றோர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம்...
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாகவே அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணைக்காக இன்று காலை பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவது இது மூன்றாவது தடவையாகும். அதேவேளை, முன்னைய...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தவுலதேவி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் வெமுலா ஸ்ரீசாய் ,ஜொன்னா பவன் குமார் . இவர்கள் இருவரும் அங்கு ஒரு வீட்டுக்குள் புகுந்து உள்ளனர்., அங்கு தனியாக இருந்த ஜாஸ்மீன் (வயது 19) என்ற இளம் பெண்ணை தாக்கி உள்ளனர். அந்த பெண்ணும் அவர்களுடன் போராடி உள்ளார். அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை பாலியல பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணிகழுத்தில்...
  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார். நிதிமோசடி குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார். 70 மில்லியன் பொது நிதி மோசடி தொடர்பில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று நீதிமன்றத்தில் நாமலுக்கான பிணை மனு முன்வைக்கப்படவுள்ளதாக அவரது...
  காலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் பலியாகியவர்கள் காலி பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,குறித்த விபத்தில் பலியாகிய இருவரும் சுற்றூலா பயணிகளுக்கு வழிகாட்டிகளாக செயற்படுபவர்கள் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த உண்ணாவிரத போராட்டம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிடப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மார்ச் மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை மூன்று மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடமாகாண முதலமைச்சர் உறுதி வழங்கியதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இந்தநிலையில் மூன்று மாதங்கள் கடந்துள்ளபோதிலும் தமக்கு எந்த...