புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக, கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயார்,...
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது பேஸ்புக்கில் இருந்து நேற்று பதிவு ஒன்று வெளியானது. சிறையில் இருக்கும் ராம்குமார் எப்படி பேஸ்புக்கில் பதிவிட்டார் என பலரும் ஆச்சரியத்துடன் அந்த பதிவை பார்த்தனர். பின்னர்தான் தெரியவந்தது இந்த பதிவை செய்தது திலீபன் மகேந்திரன் என்பவர். திலீபன் மகேந்திரன் என்பவர் கடந்த ஜனவரி மாதம், இந்திய தேசிய கொடியை எரித்து...
  இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (18) 10.30க்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  20ம் நூற்றாண்டின் முற்பகுதியின் ஒரு நாள், ரஷ்ய கப்பற்படைத் தொகுதி கிழக்கு நோக்கி தன் நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றது. யப்பான் நாட்டிற்கெதிராக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட யுத்தமே இப்பயணத்திற்கு காரணமாகும். சர்வதேச சட்டவரம்பிற்கமைய, நடுநிலை நாடுகளின் துறைமுகங்களிற்கு யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளின் கப்பல்கள் செல்ல முடியாது. இந்த யுத்தத்தில் பிரான்ஸ் ஒரு நடுநிலை நாடாக இருந்தபோதும், பிரான்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு ஆபிரிக்கா கரையோரத்தில் அமைந்த, “டாக்கார்” என்ற துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக...
  வடக்கு உலகிற்கு தெரிய காரணம் யுத்தம் மலையகம் உலகிற்கு தெரிய காரணம் அனர்த்தம் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். கேகாலை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட மக்களை சந்திபதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்கும் மேற்படி தோட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்ட போதே இவ்வாறு கூறினார். யாழ்ப்பானம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் வாழ் பழைய மாணவர்களின்...
  வவுனியா நகரசபை பணிப்பாளர் தர்மேந்திரா மற்றும் திட்டமிடல்பணிப்பாளர் திருமதி ஜெ .சுரேந்தி மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்வழக்கு தாக்கல் வவுனியா நகர சபையில் திடடமிடல் பணிப்பாளராக பணி புரியும் திருமதிஜெ .சுரேந்தி  மீதும் வவுனியா  நகரசபை செயலாளராக பணிபுரியும் திருதர்மேந்திரா  மீதும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலஞ்சஊழல் ஆணைக்குழுவில் நேரடியாக லஞ்ச ஊழல் முயற்சிக்கான அதிகாரதுஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். வவுனியா நகரசபையில் வர்த்தக நோக்குடனோ அல்லது...
    மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் செய்தி ஒன்றை ரஷ்யா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரஷ்யா விண்வெளியில் இருந்து வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், இந்த விமானம் முழுக்க அணு ஆயுதங்களால் நிரப்பப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி விண்வெளியில் இருந்து இரண்டே மணி நேரத்தில் பூமியை தாக்கும் திறன் கொண்ட விமானங்களைத் தயாரித்து வருவதாக ரஷ்யா நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்துத்...
  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த போதே அவர்...
  வவுனியாவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் தினப்புயல் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் கடந்த 4வருட காலமாக வன்னிமண்னில் தேசியம் சுயநிர்ணையம் தொடர்பில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் இப்பத்திரிகை மீது மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அதன் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரிகை கடைகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் அவர்கள் பத்திரிகை விற்பனை செய்துகொண்டிருந்த போது இப்பத்திரிகை தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக பத்திரிகை விற்பனை...