வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில்...
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் வருகிற 22-ந் திகதி ரிலீசாக இருக்கிறது, ‘கபாலி’ படம். ரஜினிகாந்தின் 41-வருட சினிமா வாழ்க்கையில் இது அவரது 159-வது படமாக வருகிறது. இதில் அவர் தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு ‘பாட்ஷா’ படத்தில் தாதாவாக நடித்து இருந்தார். முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன், லிங்கா படங்களுக்கு இல்லாத பரபரப்பும் வியாபாரமும் ‘கபாலி’ படத்துக்கு இருப்பது...
கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று மாத கால...
மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறப்பு
கடந்த ஜூலை 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீனை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக விடுக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடையை கடந்த ஜூன் 21...
பிரித்தானிய வீசா பெற்றுக் கொள்ளும் போராட்டத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரகுவரன் பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கே இவ்வாறு வெற்றி கிட்டியுள்ளது.
ரகுவரன் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்பட்ட போதும் பல்வேறு முயற்சிகளின் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
தாய் தந்தையை இழந்ததன் பின்னர் மாமா ஒருவருடன் கடந்த 2005ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ரகுவரனுக்கு கடந்த ஆறு ஏழு மாதங்களாக நாடு கடத்தப்படக்கூடிய...
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் ஸ்ரீலங்காவில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ் விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை...
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில், சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கிராம மக்களின் சாட்சியப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அடுத்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற சாட்சி விசாரணையில், குமாரபுரம் சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் அச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என அக் கிராமத்தைச் சேர்ந்த சுமார்...
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், கடந்த வழக்கு விசாரணைகளில் இராணுவத்தின் சார்பில் மன்றில் ஆஜராக...
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது.
எனினும் தற்போது காணமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள் தெடர்பான அறிக்கையொன்று தயார் செய்யப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதுவரை 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறையான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் 4 ஆயிரம் முறைப்பாடுகள்...
கிளிநொச்சியில் அப்பா, அம்மா சம்மதத்துடன் கலியாணம் கட்டடிய 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா,கடந்த திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.
பாடசாலைக்குச் சென்று வந்த மேற்படி 15 வயதுச் சிறுமி, 25 வயதுடைய இளைஞன் ஒருவரைக் காதலித்து, தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.இது தொடர்பில்...