அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் , நாடாளுமன்ற...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரெஸா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக பிலிப் ஹேமண்டும், சர்வதேச வர்த்தக அமைச்சராக லியாம் ஃபாக்சும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக...
இந்தோனேசியாவில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இஸ்லாமிய பெண்கள் போன்று உடை அணித்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பள்ளி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்துவந்தவர் அன்வர். இவரை சந்திக்க அடிக்கடி இவரது மனைவி வந்து போவது வழக்கம். இதனிடையே இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்தும் கறுப்பு அங்கி மற்றும் முகத்திரையுடன் சிறை காவலர்கள் கண்டிருக்கவே அன்வர்...
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் தனிப்பட்ட முடிதிருத்துபவரின் மாத ஊதியம் ரூ.7.5 லட்சம் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நிகராக அவரது தனிப்பட்ட முடி திருத்துபவரும் ஊதியம் பெற்று வந்துள்ளது பிரான்ஸ் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. ஒலிவியே பி என்ற பெயரில் அறியப்படும் அந்த நபருக்கு மாத ஊதியத்திற்கு புறமே வீட்டுக்கான உதவித்தொகை, குடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் என அரசிடம் இருந்து பெற்று வந்துள்ளார். மட்டுமின்றி பிரான்கோயிஸ் ஹோலண்டே ஜனாதிபதியாக...
கிரிக்கெட் போட்டிகளில் வீரேந்திர ஷேவாக்குக்கு தனி ஸ்டைல் இருக்கும், இதேபோல் சமீப காலமாக தனிப்பட்ட டுவிட்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். கடந்த வாரம் டோனியின் பிறந்தநாள் அன்று‘தேசிய ஹெலிகாப்டர் நாள்’ என ஹேஷ்டேக் செய்து அசத்தினார். இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் மேலாடை இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய கங்குலியை நடிகர் சல்மான்கானுடன் ஒப்பிட்டு டுவிட் செய்துள்ளார். அதில், 14 ஆண்டுகளுக்கு முன் கங்குலி, சல்மான் கான் போல் செய்து...
பயிற்சிக்கு லேட்டா வருவது அணியின் பேருந்தை தவற விடுவது போன்ற தவறுகளுக்கு ரூபாய் 3,400 வரை அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பளே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ளே நியமிக்கப்பட்டார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து...
பிரிமியர் புட்சல் கால்பந்து லீக் தொடர் யூலை 15ம் திகதி சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோத உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இத்தொடர் யூலை 15 முதல் 24 வரை நடக்கிறது. இத்தொடரின் தூதராக இந்திய கிரிக்கெட் டெஸ்ட அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளரங்கு கால்பந்து போட்டியான புட்சலில் ஒரு அணியில் ஐந்து வீரர்கள் விளையாடுவர். தலா 20...
ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5...
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான மஹேந்திரசிங் டோனி தன்னுடைய பழைய காதலியை இன்னும் மறக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடித்தந்தவர் டோனி,அவரைப் பற்றிய சில சுவாரஸிய தகவல்கல் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,கடந்த 2002 ம் ஆண்டுகளில் பிரியங்கா ஜா என்ற பெண்ணை டோனி காதலித்ததாகவும், இவர் தான் தன் மனைவி என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் தெரிகிறது. 2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய...
சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை தண்டனையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஒருவரை கத்தியால் பலமுறை தாக்கிய வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த...