தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ.சுமந்திரனா என்று அரசாங்கத்திற்கு சந்தேகம் வலுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் இவ்வாறு வெளியிடும் கருத்துக்களானது ஒருபோதும் செல்லுபடியாகாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில்...
காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இச்சம்பவத்தில் ஒரு சிறிய வித்தியாசமும் உண்டு. தமிழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் பெண்களாக இருக்க, இச்சம்பவத்தில் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரட்டை சகோதரிகளை...
நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலத்தினால் 2016 ம் ஆண்டுக்கான வாக்காளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் அட்டன் கல்வி வலயம் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம், இரண்டாம், நான்காம், ஐந்தாம் இடத்தினை தனதாக்கிக்கொண்டனர். தமிழ் சிங்கள பிரிவுகள் அடங்களாக 1800 சித்திர ஆக்கங்களில் சிரேஸ்ட பிரிவுக்கான போட்டியில் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய உயர்தர நுன்கலை மாணவர்களான யோகநாதன்...
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று வடமாகாண சபையை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. இதன் காரணமாக அண்மைய நாட்களில் பல இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம்...
கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்க சுபத்ரா என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தான் வசிப்பதற்கு ஒரு வீடும், ஜீவனாம்சமும் கோரி கோவில்பட்டி...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் காலி மாவட்ட காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவிற்கு உட்படாமல் செல்லும் நபர்கள் தொடர்பிலான...
பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த உடன்பாடுகளுடன் இலங்கை குறித்து உடன்பாடுகளுக்கு அமைய செயற்படவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும்...
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு, பால்மா உள்ளிட்ட 15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரசை உபகுழு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்குதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்பட்டது முதல் நுகர்வோரைச் சென்றடையும்...
  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அலரி மாளிகையில் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான...
  போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். கொழும்பில் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ”சிறிலங்காவில் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கு சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. இரண்டு...