முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாயராஜ பக்ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த இரா­ணு­வப்­பா­து­காப்பு நீக்­கப்­பட்டு பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை பாது­காப்பு பேர­வையின் தீர்மா­ன­மே­யாகும். அதனை தடுக்க முடி­ யாது எனவும் பாது­காப்பு ஊட­கப்பேச்­சாளர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த 50 இரா­ணுவ வீரர்­களில் 25 இரா­ணு­வத்தை நீக்கி அதற்கு பதி­லாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்றுக் காலையில் இருந்து அமு­லுக்கு வரும் வரையில்...
  சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று மாலை நிஷா பிஸ்வாலுடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரொம் மாலினேவ்ஸ்கி, “நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6.20 மணியளவில் UL 207 விமானத்தினூடாக இலண்டன் பயணமானார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்று பட்டம் பெறவுள்ளார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர், வரும்...
  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். தெற்கு மத்திய-ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் சிறு தொழில் வியாபாரம் செய்கின்றவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சதீஸ் தலைமையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொகவந்தலாவ பௌத்த விகாரையில் இடம்பெற்ற வியாபார வழிகாட்டல் பயிற்சி நெறியில் கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம். நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்  
மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினால் 12-7-2016 கொட்டக்கலை பிரதேச சபை காரியாலயத்தில் வழங்கப்பட்டன. இதன்போது நுவரெலியா பிரதேச சபை செயலாளர் விஜேந்திரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவிக்கையில்,...
  தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர். மேலும் இதே காங்கிரஸ் மேலிடத்திலும்...
  பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். களுதாவளையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி நிர்வாக சபை உறுப்பினர் கே.குணம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராச்சிங்கம் முன்னிலையில் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான க.கிருபானந்தசிவம் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் முன்னைய தலைவராக...
  சிறைவாசம் அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினை பார்ப்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரும் வெலிகட சிறைச்சாலைக்கு சமூகமளித்திருந்தனர். நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோரும் தாய் ஷிரந்தியும், யோஷிதவின் காதலி யொஹானா ரத்வத்தே ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். யொஹானா என்பவர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவினது மகள் எனக் கூறப்படுகின்றது. யோஷித மற்றும் யசாரா இடையிலான சம்பந்தம் முறிந்ததன் பின்பு 2013 ஆம் ஆண்டு...
  இலங்கை கடல் எல்லையை நீ காப்பாற்று முடியாவிட்டால் நாங்கள் செய்கிறோம் வடமாகாண மீனவர்கள் பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை.