மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையத்துக்கான நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்து விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை 1983 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி...
புதிகாக இனைத்துக்கொண்ட உதவி ஆசிரியர்களுக்கு வழங்கும் 6 ஆயிரம் ரூபாய் சம்பள கொடுப்பனவை அதிகரிக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார். கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். கலாசாலையில் பயிற்சிநெறியைமேற்கொள்ள முடியாத நிலையில் புதிதாக கட்டிடமொன்றை அமைக்கும் வகையில் அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 66 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான...
கொழும்பு ஹட்டன் பிரதான பாதையின் கரவனல சந்தியில் கேகாலைக்கு திரும்புவதற்கான பாதையில் போடப்பட்டிருக்கும் பெயர் பலகையில் கேகாலை என்பதற்கு பதிலாக கெகாணல என தமிழை கொலை செய்துள்ளார்கள். இச் செயற்பாடு பாதை ஊடாக பயணிக்கும் தமிழ் மொழி பேசுபவர்களை பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் இதை திருத்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமை குறித்து கவலைக்குள்ளாகியுள்ளது. தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக செயற்பட்டு வரும் அரச நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட வேண்டியது...
கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெரணியகலை கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம் தெரணியகலை பிரதேசத்திற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னெடுத்து வருகின்றார். அதன் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான மலையகத்தில் 25 கணித விஞ்ஞான பாடசாலை செயல்திட்டத்தில் இப்பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயல்திட்டத்தில் 'ஏ' தரத்திற்கு...
அட்டன் போடைஸ்  டயகம் பிரதான பாதையை செப்பனிட்டு தருமாறு போடைஸ் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பட்டல்கல சந்தியிலிருந்து போடைஸ் வரை 7 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக உடைந்து காணப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறித்த பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அடிக்கடி பழுதடைவதனால் போக்குவரத்தில் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் நோயாளர்களும் கர்ப்பினித் தாய்மார்களும் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், போடைஸ் மற்றும் புலியாவத்தை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களூம்...
கல்வி அமைச்சின் பெருந்தோட்ட அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரிவிற்கான பணிப்பாளர் திருமதி. சபாரஞ்சன் தலைமையில் அட்டன், கம்பளை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கணித பாட ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட செயலமர்வு அட்டன் சீடா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தின் வளவார்கள் பங்களிப்புடன் விரிவுரையாளர்களும் பங்குபற்றினர். (பா.திருஞானம்¸ க.கிஷாந்தன்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்)  கழகத்தின் மறைத்த தோழர்களையும்  அனைத்து இயக்க போராளிகளையும், யுத்த காலத்தில் மரணித்த பொது மக்களையும் நினைவுகூரும் முகமாக  வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இம்முறையும்  13/07/2016 தொடக்கம் 16/07/2016 வரையான காலப்பகுதியை தமது தோழர்களின் வீரமக்கள் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக்...
முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர். இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல செயல்படுகிறது. இங்கு மதுப்பழக்கம் முற்றி விடமுடியாமல் உடலும் மனமும் கெட்ட குடிகாரர்களுக்கு வைன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணி நேர இடைவெளியில் அளவான வைன் கோப்பையில் ஊற்றிக்கொடுக்கிறார்கள். இதற்கு நிர்வகிக்கப்பட்ட மது திட்டம் (Managed alcohol program)...
கயல் சந்திரன் அஞ்சனாவை திருமணம் செய்து பிறகு தனது திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் நாளைய இயக்குனரில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்ற சுதர் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை கேட்டு உடனே ஒப்புக்கொண்டுள்ளாராம். இப்படம் 4 திருடர்களை பற்றிய டார்க் ஹுமர் படமாக உருவாகவுள்ளது, கிட்டத்தட்ட சூதுகவ்வும் ஸ்டைலில் ஒரு புதுவிஷயத்தை கையாளவுள்ளார் இயக்குனர் சுதர். இப்படத்தில் பார்த்திபனும், சந்திரனும்...
விஜய் நடிக்கும் படங்களுக்கு சமீபகாலமாக நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதில் கத்தி படம் உச்சக்கட்ட பிரச்சனையை சந்தித்தது. தற்போது இந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கியும் இன்னும் நாயகி கிடைக்கவில்லையாம். அண்மையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினிடம் நாயகிக்காக கேட்டபோது, 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு படக்குழுவினரை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார்.