முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கு  நேற்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம...
ஐபிஎல் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத்...
யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை பொலிஸாரால் தெரிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சந்தேக நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து நாடு முழுவதும் போதைப் பொருள்களை மிக நுணுக்கமாக விநியோகம் செய்து வருகின்றமையும் இந்த விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தைவான் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து இன்று...
ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு சுமார் 1,000 கிலோ மீட்டர் வரை தெரியும். இந்நிலையில் வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979 இற்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2  மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு,  அடுத்த அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.நந்தசேன காலமானார். 69 ஆவது வயதான எச்.நந்தசேன அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலம் வடமத்திய...
இலங்கையில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார். வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  டொக்டர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையில்  5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும்...
பாறுக் ஷிஹான் கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான பாத்திமா ருகையா அவர்கள் பொத்துவில் - ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார். ஆசிரியை பாத்திமா றுகையா தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சட்டரீதியானது அல்ல என்ற அடிப்படையில் எழுத்தானை (Writ) மனுவொன்றை சட்டத்தரணி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.