வடமாகாணத்திற்கென பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வடமாகாணத்தில் வாழும் மக்களுக்கு பயன்மிக்கதாக அமையவேண்டும். 'பேய்கள் உலாவிவரும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் இராது' என அமைச்சர் ஹாரிசன் கூறியிருப்பது வவுனியாவின் ஓமந்தை வாழ் பிரதேச மக்களையா? எனவும் வினாக்கள் எழுகின்றன. ஓமந்தையின் பெருமைகளை அறிந்திராத ஹாரிசன் பொறுப்பற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துக்களைக் கூறுவதை தன்மானமுள்ள தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருகாலத்தில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த...
  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல். றமணன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாள் லெப். கேணல். றமணன் ( வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் ) சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி. மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது , அவனுடைய சிறு வயது கருதி...
வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை, ஓமந்தையில் அமைப்பதே சிறந்ததென கருத்துக்கணிப்பில் முடிவாகியுள்ள நிலையில், அதற்கான காணியை ஒதுக்கித் தருமாறு பிரதமர் ரணிலுக்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக இடம் தொடர்பான பிரச்சினை இழுபறியில் இருந்துவந்த நிலையில், அதற்கு கருத்துக்கணிப்பினூடாக தீர்வு காண்பதாக அண்மையில் கூட்டமைப்பினரால் நடத்தப்பட்ட சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் வடக்கு முதல்வர் காரியாலயத்தின்...
யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு மாவிட்டபுரம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த காணியில், தலா 25லட்சம் ரூபாய் பெறுமதியான 100 வீடுகளை அமைப்பதற்கான பணிகளை யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. உள்ளக இடப்பெயர்வு காரணமாக கடந்த 26 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் குடித்தொகை பெருக்கத்தினால் பல குடும்பங்கள் வலி...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்குகிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய இன்று மாலை ஆறு மணியளவில்குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான்நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர்குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளனர்கு றித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவதுதர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் தர்மபுரம்மயில்வாகனபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு மூன்றுமாதங்களிற்கு முன்னர் சட்டவிரோத...
இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். “கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் என். இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, அரசியல் வாத்தியாராக இருந்திருக்கின்றேன். இப்பொழுது அரசியல் வாதியாக இருக்கின்றேன். ஆனால், இலங்கை அரசியலில் எனக்கு...
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 35 பேர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பவுள்ள 35 பேரில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய...
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையவும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற...
திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவத்தினர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற படுகொலையின் போது 26 பேர் உயிரிழந்தனர். இது குறித்த வழக்கு தற்போது அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இன்று பத்தாவது நாளாகவும் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின், சம்பவத்தின் போது தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிலர் சாட்சியமளித்துள்ளனர். அத்துடன், குறித்த பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட...
இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கை அடங்கிய மனுவை அவர், சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் கையளித்துள்ளார். சாந்தன் தற்போது வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மனுவானது, மத்திய மற்றும் மாநில உள்துறை செயலாளர்களுக்கு வேலூர்...