மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், போலியான முகவரியை அளித்து சிம் அட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக, தனிப் படையினர் தூத்துக்குடியில் திங்கட்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கடந்த மாதம் 24 ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள டி. மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் பிடிக்க...
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை நாமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி விசாரணைப் பிரினால் நேற்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ கொழும்பு மகசீன் சிறைச்சாலையில்...
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்! முதலமைச்சர்
Thinappuyal -
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடமாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள்.
பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள்...
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் பரிந்துரைத்துள்ளது.
குறித்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு நாளை மறுதினம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த இடமாற்ற பரிந்துரைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஒரே பொலிஸ் நிலையத்தில் 4 வருடங்களாக கடமையாற்றியவர்களும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்குமே குறித்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க
15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,கடன் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் வட் வரியை தொடர்ந்தும் அறவீடு செய்ய நேரிட்டது.
இந்த இளைஞர்களுக்கு எதிர்காலம் உண்டு இந்த இளைஞர் சமூகம் கடன் செலுத்த வேண்டியதில்லை.
அத்துடன், இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க...
திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நிலாவெளி வீதியில், தனியார் காணியில் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த இரண்டு சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர்.
இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும், புத்தர் சிலைகள் வைத்து படையினரால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இங்கிருந்து படையினர் விலகிய போது, புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், சாம்பல்தீவுச் சந்தியில்,...
டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது.
இதனால் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவை இன்று மாலை பார்வையிட சென்ற மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதற்கு முற்பட்டனர்.
எனினும், கேள்வி கேட்பதற்கு முன்னரே "உங்களுக்கு இப்போது சந்தோசமா"?' என ஊடகங்களை நோக்கி மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் தனது மகன் கைது செய்யப்பட்டதை பார்க்கிலும், பாரிய வெற்றி இன்று உயர்நீதி மன்றில் கிடைத்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில நிதி மோசடிகள் சம்பந்தமாக இன்று கைது செய்யப்பட்டார்.
நாமலின் கைது மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதுவரை பொறுமை காக்காது தற்புகழ்ச்சி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடனேயே சிறைச்சாலைக்கு...
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,
Thinappuyal News -
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.