ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு ‘டஃப் ஃபைட்’ தந்த படையப்பாவை மறக்க முடியுமா? தனக்கு நிகரான முக்கியத்துவத்தை ரஜினி அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்திருப்பார். இன்றுவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லி பாத்திரமாக அந்த கேரக்டர் நிலைத்து நிற்கிறது. அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கு கலக்கோ என்று கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி வரை பட்டையை கிளப்பி வருகிறார். இப்போது பாகுபலி 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும்...
  ஸ்பெயினில் நடந்த பாரம்பரியான காளை அடக்கும் போட்டியின்போது ஒரு இளம் வீரர் மாடு முட்டித் தூக்கிப் போட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். 21வது நூற்றாண்டில் இதுபோல உயிர்ப்பலி ஏற்படுவது இதுதான் முதல் முறையாகும். விக்டர் பாரியோ என்ற 29 வயது வீரரின் மார்பில் முட்டிக் கிழித்த அந்த காளை அவரைத் தூக்கி வீசியது. படுகாயமடைந்த நிலையில் இருந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பாரியோ பரிதாபமாக உயிரிழந்தார்....
  வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன் நேற்று (09) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் டெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சுழற்சி முறை ஆசனத்திற்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அதற்கமைய அடுத்த சுழற்சி...
  தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாகத் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு சுவாதி கடைசியாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நண்பர் கொடுத்த தகவலின் படி ராம்குமாரை கைது செய்ததாகத் தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி இன்ஜினீயர் சுவாதியை படுகொலை செய்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த பி.இ படித்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுவாதிக்கும்,...
யூரோ கிண்ணம் 2016 கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று போர்த்துகல் அணி வரலாறு படைத்துள்ளது. பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது. தொடக்கம் முதலே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. சொந்த...
போர்த்துக்கல் அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த அணியின் தலைவர் ரொனால்டோ மிகவும் குஷியாக உள்ளார். யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்றது. இந்த வெற்றி குறித்து போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திற்காக தான் நீண்ட காலமாக, 2004ம் ஆண்டில் இருந்து காத்திருந்தேன். போர்த்துக்கல் அணி வீரர்கள் இந்த வெற்றிக்கு...
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம்வென்றுள்ளது. இந்த தொடரில் பிரான்ஸ்அணியின் ஆண்டோனி கிரீஸ்மன் அதிக கோல்களை (6 கோல்கள்) அடித்து தங்க ஷூவை தட்டிச் சென்றுள்ளார். போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ 3 கோல்களுடன் வெள்ளி ஷூவையும், பிரான்ஸ் வீரர் ஆலிவிர் ஜிரோட் 3 கோல்களுடன் வெண்கல ஷூவையும் வென்றனர். மேலும், யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிகளில் அதிக கோல்...
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் உலகமெங்கும் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய கெய்ல், தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் ஜமைக்கா அணியின் தலைவராக இருக்கும் கெய்ல், டிரின்பகோ அணிக்கு எதிராக 108 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 11 சிக்சர்) எடுத்து அசத்தினார். இது இவரது 18வது டி20...
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது என்று நெய்மர் கூறியுள்ளார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சிலியிடம் தோற்றது. இதனால் மிகவும் விரக்தியடைந்த மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமன்றி சக கால்பந்து வீரர்களையும் மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக பிரேசில் கால்பந்து வீரரும், பார்சிலோனா கிளப்...
ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகை நம்ப வைக்கும் பணியில் அந்த அமைப்பு தற்போது களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிரியாவின் நினிவே மண்டலத்தில் அமைந்துள்ள தல் அஃபர் பகுதியில் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது....