போலி கடவுச்சீட்டு மூலம் துருக்கி ஊடாக கனடா செல்ல முற்பட்ட நான்கு பேர் இன்றுகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம்,இளவாலை,முள்ளிபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்24தொடக்கம் 33 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதோடு,துருக்கிய விமான நிறுவனத்துக்குசொந்தமான டி.கே.731 விமானம் மூலம் துருக்கி சென்று அங்கிருந்து கனடா செல்லதிட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவர்களை பரிசோதனை செய்தஅதிகாரிகள்,இவர்கள் மீது சந்தேகம் கொண்டு குற்றப் புலனாய்வு பிரிவினருக்குஅறிவித்ததையடுத்து...
கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து மகிந்த ராஜபக்க்ஷ விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறு மாத்திரமே தான் ஆலோசனை வழங்கியதாக மகிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் நகர நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்...
நீதித்துறை மற்றும் சட்டத்துறை சிறப்பாக காணப்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி நிலவுவதாகக் கூறலாம். ஆனால் இலங்கையில் சட்டம், நீதி என்பன அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களினால் ஆட்சி செய்யப்படுவதால் தேசிய கொடி போல நிமிர்ந்து நிற்க வேண்டிய சட்டங்கள் தற்போது இலங்கையில் வளைந்து நெளிந்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை மற்றும் சட்டத்துறை பற்றிய விவாதத்தின் போதே மேற்கண்டவாறு...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களுக்கு அவ ர்கள் கொமர்ஷல் வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டமான அருணலு கணக்கை வைத்திருந்தால் மேலும் பல மில்லியன் ரூபாக்களை வெகுமதியாக வெல்லும் வாய்ப்பு கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அல்லது மாவட்ட மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் முதலாம் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களைப் பெறுகின்றவர்களுக்கு மீண்டும்...
இந்த நாட்களில் மிகவும் வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் காரணமாக சப்ரகமுவபல்கலைக்கழகமானது எதிர்வரும் 20ம் திகதி வரை மூடப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு சில பீடங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு,அனைத்துபீடங்களுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் காய்ச்சலைகட்டுபடுத்துவது, விடுதிகளை சுத்தம் செய்வது, பல்கலைக்கழக மாணவர்கள்பயன்படுத்தும் நீரினை பரிசோதனை செய்தல், நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்புநடவடிக்கை எடுத்தல் என்பவற்றிற்காக மாணவர்களுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளதாக இதன் பீடாதிபதி எச்.எஸ்.ஆர்.ரொசய்ரோ குறிப்பிட்டுள்ளார்.
எனவே இன்றிலிருந்து பல்கலைக்கழகம்...
வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைக்கப்பட வேண்டும் என இருவேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில், ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? என உறுப்பினர்களின் கருத்தறிய முதலமைச்சர் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்துள்ளார். மறுபக்கம் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களை பெற மாகாணசபை...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாசிக்குடா...
பிரபாகரன் இறுதிப்போரில் இறக்கவில்லை என்கிற போது அமைச்சர் ராஜித சேனாராட்ன எப்படி கவலை தெரிவிப்பது
Thinappuyal News -
தமிழீழ விடுததலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தி தனக்கு கவலை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித, யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக செயற்பட்ட பல்வேறு அமைப்புக்களுடனும் தான் தொடர்புகளை பேணி செயற்பட்டதாகவும் அந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் பாசிக்குடா பிரதேசத்தில் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலை பொலிஸாரினதும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டையடுத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இரவு கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து தமிழ் சகோதரர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில், தாக்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...
நுவரெலியா பதுளை பிரதான பாதையில் ஹக்கலை பிரதேசத்தில் கன ரக கொள்கலன் மின்கம்பத்தில் மோதுண்டது
Thinappuyal News -
நுவரெலியா பதுளை பிரதான பாதையில் ஹக்கலை பிரதேசத்தில் கன ரக கொள்கலன் ஒன்று பதுளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பாதையை விட்டு விலகி சேதத்திற்கு உள்ளானது. குறித்த வீட்டிற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சாரதியின் தூக்கமே காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை ஹக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.