இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ இன்று இலங்கை வருகின்றார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் வாங் ஜீ எதிர்வரும் ஞாயிறு வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், வணிகம்,...
வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்பட்ட சுவடுகளும் எவ்வாறு காட்சியளிக்கப்பட்டதோ அதே போன்றுதான் இன்று கொஸ்கம பிரதேசம் காணப்படுகின்றது.
கடந்த மாதம் அவிஸ்ஸாவலை சாலாவ இராணுவ முகம் முற்றாக தீக்கிரையாகியது. அந்தப் பிரதேசத்திலுள்ள பல வீடுகளும், வைத்தியசாலைகளும், பாடசாலைகளும் பெரும் சேதமடைந்தன.
இந்த கோர விபத்து ஏற்பட்டு ஒரு மாதங்களை கடந்த நிலையிலும் இன்று மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அவல நிலையில் உள்ளனர்.
வீடுகள்...
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என அண்மையில் செய்திகள் வெளியாகின.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது பாரிய சவாலாக அமைந்துள்ளது.
அத்துடன், இந்திய மீனவர்களின்...
கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி எஸ்.லெனின்குமார் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
முன்னதாக, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சிவநகர் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி தம்பதியினரான இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் போரளியென தெரிவித்து அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன்,...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர் வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமான ”தி ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சுமார் ஒரு லட்சம் பேர்...
எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டுக்கும் இடையில் ஒருமித்த காரணிகள் காணப்படுகின்றன.
உத்தேச அரசியல் அமைப்பு...
சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன்.
சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது.
இப்போது அது என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் இங்கு...
தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம்.
7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (எ) ராஜா. இவரது மனைவி மோகனவள்ளி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
அதில் ரம்யா என்ற 7 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். இந்த...
மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விழுந்து வணங்க வேண்டுமென அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், சர்வதேச போர்குற்ற நீதிமன்றம் மற்றும் மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி மைத்திரிபால காப்பாற்றியுள்ளார்.
எனவே ஜனாதிபதியை வெள்ளை கைக்குட்டை ஒன்றை கீழே இட்டு ஜனாதிபதியை...
மசாஜ் செய்து கொள்வதற்காக மசாஜ் பார்லருக்கு சென்ற முதியவர் ஒருவர் மரணித்துள்ளார்.
கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள மசாஜ் பார்லர் ஒன்றின் மலசல கூடத்தில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அக்குரண பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்று மசாஜ் பார்லரில் உயிரிழந்துள்ளார்.
மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த நபர், மலசல கூடத்திற்கு சென்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்ற காரணத்தினால், அதன் ஊழியர்கள் இது குறித்து...