கொடூரமான முறையில் மிருக வேட்டையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம், இணையங்கள் மற்றும் செய்திகள் ஊடாக பரபரப்பாக பேசப்பட்ட 6 வேட்டைக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை 25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும், தெல்தெனிய மாவட்ட நீதவான் என்.எம்.பரீக்டீன் இன்று விடுதலை செய்துள்ளார். சந்தேகநபர்கள் பல வருடங்களாக நக்கீல்ஸ் வனப்பகுதியில் வேட்டையாடி வந்திருந்ததுடன், மிகவும்...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ இன்று இலங்கை வருகின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் வாங் ஜீ எதிர்வரும் ஞாயிறு வரை நாட்டில் தங்கியிருப்பார். இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், வணிகம்,...
வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற மத்திய கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கமைய அந்த நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்த கோரிக்கை தொடர்பில் அந்த சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது. அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனியாவில் 200...
  கடந்த கால அரசு செயற்பட்டது போன்றே இந்த மைத்திரி அரசும் ஊடகவியாளர் விடயத்தில் செயற்படுவது ஊடகவியளார் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால அரசாட்சியில் 32 ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும், பல ஊடகவியளார்கள் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஒரு நாட்டில் ஊடகவியளார்களின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அரசாங்கம் புலனாய்வுப் பிரிவினைப் பயன்படுத்தி ஊடகவியளார்களை அடிக்கடி விசாரிப்பதும், அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதும் தகுதி வாய்ந்த...
  இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார். ரணில் – மைத்ரி அரசாங்கம் மேற்கொண்டுவரும் புதிய அரசியல்யாப்பில், வார்த்தை ஜாலங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டாடும் சதி முயற்சியொன்றும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி...
  தம்பி Aswin Sutharsan கீறின படத்தைப் பார்த்திட்டு நீங்கள் நினைக்கக் கூடாது அவையள் இரண்டு பக்கமும் பிடிச்சு இழுத்துக் கொண்டிருக்கினம் என்று..... வடக்குப் பொருளாதார மையத்தை மத்தாகப் பயன்படுத்தி சாணக்கியப் பாம்பைத் திரித்துக் கயிறாகக் கட்டி நல்லாட்சிப் பாற்கடலில் #மென்வலுவைக்கடைந்தெடுக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள்...... சில வேளை சாணக்கியப் பாம்பு நஞ்சைக் கக்கினால் அதையும் உடனே உட்கொள்ள தயார் நிலையிலை திறப்பில்லா வீரர் என்ன மாதிரி ரெடியாக நிற்கிறாரென்று பாருங்கோ..... சொல்ல மறந்திட்டன் தொண்டைக்குள்ளாலை...
  வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர் வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 'பனையோலையும் - எழுத்தாணியும்' இணைகின்ற நல்லிணக்கப் பயண நிகழ்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டாது நகர்வாக வடக்கின் ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் சந்தித்த இவ் ஊடகவியலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகள்...
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மகேஸ்வரி. இதன் பின் பல சீரியல்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பின் ஒரு சில படங்களில் தலையை காட்டி சென்றார், ஆனால், இவரின் கவனம் முழுவதுமே சீரியலில் தான் இருந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் மகேஸ்வரி நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது, விஜய்யும் கல்லூரி மாணவனாக நடிக்கின்றார் என நம் தளத்திலேயே கூறியிருந்தோம். ஆனால், இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த கேப்டன் தோனி. அவருக்கு இன்று 35வது பிறந்தநாள். இதை இந்தியாவே கொண்டாடி வருகின்றது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இதற்காக ஸ்பெஷலாக நன் சினி உலகம் பக்கத்தில் கபாலி வெர்ஷனில் தோனி என்று ஒரு சிறப்பு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக...