சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் சுல்தான் படம் வெளிவந்தது. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 37 கோடி வசூல் செய்துள்ளது, இதன் மூலம் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சல்மான் நிரூபித்துவிட்டார். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் இன்றே(உலகம் முழுவதும் சேர்த்து) ரூ 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.
அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளதாம். மேலும், இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இன்று சில தகவல்களை அனுப்பியுள்ளனர். இப்படத்தை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இதோ உங்களுக்காக....
காஜல் அகர்வால் அடுத்து விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். இதில் ‘இந்த காலத்தில் உண்மையான காதல் என்பது குறைவு, ஆனால், அதற்காக கொலை செய்வது, தற்கொலை செய்வது ஏன் என்று புரியவில்லை. காதல் தோல்வி என்றால் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும், இதற்கெல்லாம் தற்கொலை செய்வது எந்த விதத்திலும் தீர்வு இல்லை’ என கூறியுள்ளார்.
இன்று காலை 9.00 மணியளவில் தனது கடமைகளைச் செய்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றபொழுது அவருடைய அலுவலகம் நீர்பாசனப் பணிப்பாளர் அவர்களால் இழுத்துமூடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவருடைய வாகனமும், வாகனத்தின் திறப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்பொறியிலாளரின் கீழ் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றி வந்துள்ளனர். பணிப்பாளருடைய மோசடி தொடர்பிலும், இத் திணைக்களத்தில் பணிபுரிபவர்களுடன் தகாத தூசன வார்த்தைப் பிரயோகங்களாளும் பேசியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்....
இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது. நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும் இலங்கையரான சுரேஷ் என்பவர் கடந்த 23ம் திகதி இலங்கை வந்துள்ளார். ஆயுதமுனையில் நள்ளிரவு கடத்திச் சென்ற மூவர் 7000 யூரோவை வழங்குமாறும் 7000 யூரோவை தருவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு தருமாறும் அச்சுறுத்தியதுடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர். துப்பாக்கியை வாய்க்குள் திணித்து அச்சுறுத்தி கடிதத்தில் கையெழுத்து...
கல்பிட்டி - குடாவ கடற்பரப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவினை புத்தளம் பொலிஸ் விசேட பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கல்பிட்டி விஜய கடற்படை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த 85 கிலோ கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இவர்கள் மீனவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கஞ்சா கடத்தும் வேலையை முன்னெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா மேற்படி உத்தரவினை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ்...
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேக...
நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உட்கொள்ள வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் நஞ்சு வகைகளை பயன்படுத்துகின்றனர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வேட்டையாடப்படும் இறைச்சி வகைகளை உட்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென மக்களிடம் கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக தாகத்தை தீர்த்துக் கொள்ள வரும் மிருகங்களை நஞ்சூட்டி வேட்டையாடப்படுகின்றது. இவ்வாறு நஞ்சூட்டி வனவிலங்ககளை கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என...
மலையகத்தின் இருவேறு பகுதிகளிலுள்ள நீர்நிலைகளிலிருந்து 28 வயதுடைய ரவிச்சந்திரன் சுரேந்திரன் , 39 வயதுடைய பெருமாள் நாகராஜ் ஆகியோரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். தலவாக்கலை, மிட்டில்டன் தோட்டத்தில் உள்ள வடிக்கானிலிருந்து ரவிச்சந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞனின் சடலத்தை நேற்று (06) மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வடிகானில் சடலம் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு பூண்டுலோயாவிலுள்ள...