இரசாயனத்தை பயன்படுத்தி முடியை நேராக்கியவர்கள் மற்றும் இயற்கை முடி உடையவர்களுக்கும் கூட, முடி நன்றாக வளரவும், உறுதியாக இருக்கவும் ஈரப்பதம் அவசியம் அல்லவா? அதற்கு உறுதுணையாக இருக்கிறது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பெண்களின் சமையலறை ஆகட்டும் அல்லது அலங்கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்து பெட்டி ஆகட்டும், இவை அனைத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்து...
சமையலறையில் உள்ள கடுகு, மஞ்சள், குங்குமப்பூவில் தொடங்கி, பெருங்காயம் வரை அவற்றின் மருத்துவ குணங்கள் ஆரோக்கியம் தருகின்றன. மஞ்சள் மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, ஜலதோஷம், வாய்வு, இருமல், என நிறைய வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதோடு, சருமத்தில் ஏற்படும் தொற்று, புண், படை, சரும அலர்ஜி என நிறைய சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது மிளகு மிளகு காரமான மசாலா பொருள். இது உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது. கிருமி நாசினி,...
தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயானது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே...
பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. மோரில் விட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம். சோற்று கற்றாழை, மோர் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். சோற்று கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ...
பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு, செதில் படிந்து காணப்படும். இதனால் முக்கு மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்னையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்... மிதமான சுடு நீரில் முகத்தை கழுவவும் குளிர்காலத்தில் மிதமான சூடுள்ள தண்ணீரில் குளிப்பது சுகமே. இருப்பினும் அடிக்கடி உங்கள் முகம் மற்றும் கைகளை மிதமான சுடு நீரில் கழுவும் போது தோல் உரிவதும், உங்கள் சருமத்தின் எண்ணெய்ப்பசை நீங்குவதும்...
பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உடலும் அழகுடன் மின்னும், அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்த ஒன்று. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது. உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டபின் ஒரு கேரட்டை சாப்பிட வேண்டும். இதனால்...
மனிதர்களின் வயது முதிர்ச்சி அடைவதை தடுத்து நீண்டகாலமாக வாழ வைக்கும் மருந்தை அடுத்த மாதம் மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள St. Louis நகரில் உள்ள Keio மற்றும் Washington பல்கலைக்கழங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மனிதர்களுக்கு வயது கூடுவதை தடுத்து நிறுத்தும் nicotinamide mono nucleotide (NMN) என்ற மாத்திரையை விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக எலிகளின் உடலில்...
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இலங்கையே தீர்வு வழங்க வேண்டுமென இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இலங்கைப் பிரதிநிதிகளிடம், இந்திய பிரதிநிதிகள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகளை இலங்கையே மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளது. எட்கா உடன்படிக்கையினால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கு நன்மை ஏற்படும்...
15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 38 வயதுடைய நபர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நபர் சிலாபம் - கரவிட்டாகரய பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் பாடசாலை வேனின் சாரதி என்றும், அவரின் வானில் குறித்த மாணவி பாடசாலை சென்று வந்த போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த விடயம் மாணவியின்...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் விலகல் காரணமான உத்தேச பொருளாதாரச் சரிவிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆசிய நாடுகளின் உறவை வலுப்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இதன் ஒருகட்டமாக இந்தியாவுடனான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார (எட்கா) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்காக சர்வதேச வர்த்தக விவகாரங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இரண்டொரு தினங்களுக்குள் இந்தியாவுக்கு விஜயம் செய்து இருதரப்புக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போதைக்கு சீனாவில் விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமைச்சர்...