கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்கதல் நடாத்தப்பட்டது. இதன்போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, சிவலிங்கம் ஆருரன், பத்மநாதன்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார். அதாவது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். கடந்த...
  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார். நோர்வே, உக்ரேன் பயணங்களை முடித்துக் கொண்டு ஜெனிவா வந்தடைந்த மங்கள சமரவீர, நேற்று பேரவைக் கூட்டத்தொடரில் பக்க நிகழ்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு உப மாநாட்டில் பங்கேற்று...
  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைந்துகொள்வார் என்று சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
  பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது. கடந்த 13ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரையான ஐந்து நாட்கள், கொழும்பில் இதுதொடர்பாக பயிற்சி அளிக்கும் கருத்தரங்கு ஒன்று அமெரி்க்காவினால் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை, காவல்துறை, கடற்படை, கடலோரக் காவல்படை அதிகாரிகள் பங்குபற்றினர். இவர்களுக்கு, அனைத்துலக பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுக்கும் திட்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க இராணுவ நிபுணர்கள்- எல்லைப்...
  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய கட்சியின் முதலாவது மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) கொழும்பில் நடத்தப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பஷில் ராஷபக்ஷ முன்னெடுத்து வருவதாகவும் ஆனால் பஷிலின் தலையிட்டை பொது எதிர்க் கட்சியினரின் பெரும்பாலானோர் விரும்பவில்லையென்றும் தெரியவருகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரிசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொது எதிர்க் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்....
  பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் சிறிலங்கா விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,...
  சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும், பசில் ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார். நாங்கள் மகிந்த ராஜபக்சவுடன் தான் இருந்தோம். நாம் அவரைக் கைவிடவில்லை. ஆனால், பசில் 24...
  மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் காரணமாக வன்முறைக் கலாச்சாரம் உருவாக்கம் பெறுவதாக மட்டக்களப்பு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற போர்வையில் குறித்த நிகழ்வுகளுக்கு உதவி வழங்குவதாக கூறிக்கொண்டு உள்நுளையும் சிலர் பாடசாலை நிர்வாக விடயங்களில் தலையிடுவதுடன் குறித்த பாடசாலைகளின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மட்டக்களப்பு பிரபல பாடசாலை...
வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! அப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 - 4 மாதங்களில் பிணை அல்லது ஓராண்டு சிறை பரிசாகக் கிடைக்கும். இது 1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்குப்பின் ஈழத்தில் அத்துமீறி நடந்த இந்திய இராணுவத்தின்...