இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் மொயின் அலியின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடக்கிறது. இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி 28 ஓட்டங்களுடனும், கிறிஸ்வோக்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தில் வோக்ஸ்(39), பிராட்(7), மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின்...
  அரிது அரிது மானிடராய் பிறந்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தலிரிது என்ற ஒளவையின் வாக்கினிற்கேற்ப ஆறறிவுள்ள மனிதர்களாய் பிறந்து வாழும் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல காரியங்களை செய்திடல் வேண்டும். பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையை நல்ல படியாக வாழ வேண்டும். நாம் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நம்முடைய பெயர் புகழ் நிலைத்திருக்கும் படி வாழ்ந்தால் நம்முடைய பிறந்த...
தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும், அண்மையில் நடந்த சட்ட மன்றத் தேர்தல், இலங்கையில் கூடுதலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இம்முறை சமூக வலைத்தளங்களிலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருந்ததால், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அதிகளவில் இந்த தேர்தல் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. 2009ல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குத் துணைபோன காங்கிரஸ் கட்சியும், அப்போது அதனுடன் இணைந்திருந்து விட்டு, பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் இனிக் கூட்டில்லை...
இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது. அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரினால் அண்மையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கனேடிய கெடட் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருது அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும்...
அப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த iPhone 6S மற்றும் iPhone 6S Plus என்பன கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இதனைக் கருத்தில் கொண்டு இக் கைப்பேசிகளின் வடிவமைப்பினை ஒத்த Galaxy C5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசி முதன்...
கணணி சாதனங்களின் உற்பத்தியை தாண்டி வேறு சில சேவைகளையும் அப்பிள் நிறுவனம் வழங்கி வருகின்றமை அறிந்ததே. அதில் ஒன்றுதான் அந் நிறுவனத்தின் உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய Apple Pay சேவையாகும். இச் சேவையானது தற்போது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. அப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள இச் சேவையை மேலும் சில நாடுகளுக்கு விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய...
தகவல் தொடர்புத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் செயலி மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக்உரையாடவுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள டிம் கோப்ரா, ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் டிம் பீக் ஆகிய விண்வெளி வீரர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் மார்க் ஜுக்கர்பக் வருகிற ஜூன் 1-ல்உரையாட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வினை நாசா மையத்தின் பேஸ்புக் பக்கத்தின் மூலம் உலக மக்கள்...
நமது குரலின் கட்டளைக்கு ஏற்றவாறு விரைந்து செயலாற்றும் புதிய கருவியான கூகுள் ஹோம் என்ற கணனியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் நம் விரல் நுனியில் தெரிந்து கொள்ளலாம், அந்த வகையில் தொழில்நுட்ப கருவிகள் நம் வாழ்வோடு இணைந்து விட்டன. இந்நிலையில் நமது குரலின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு விரைந்து செயலாற்றும் வகையில் கூகுள்...
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஏசர் (Acer) நிறுவனம் புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. Acer Liquid Zest Plus எனும் இக் கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை கடந்த மாதமே வெளியிட்டிருந்த அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந் நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் அளவில் முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்ய வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel...
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட ஜெயிலானி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இவருடன் கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள். இதன் போது பாடசாலையில் கற்றலில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், இணை பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் உட்பட...