சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது. ரெமோவில் சிவகார்த்திகேயன் அவ்வை சண்முகி கமல்போல் பெண் வேடம் அணிந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதால் அவரே பெண் குரலில் டப்பிங் பேசவுள்ளாராம். இதற்கு முன் கமல்ஹாசன் மட்டுமே இப்படி செய்தார்...
சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்கினார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பொறுப்பதிகாரியான ஹெலன் கிளார்க், ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னிலை பெற்றுள்ள ஒருவராவார். அதிகாரம் மிக்க இந்தப் பெண்மணி உலகின் முன்னணி இராஜதந்திர...
இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்நடிக்கின்றார். இதுமட்டுமின்றி மலையாள நடிகை அபர்னா வினோத்தும்ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் நடிப்பதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்காளா?, அது வேறு ஒன்றும் இல்லை, இவர் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் பல சர்ச்சைகளை உருவாக்கியவர். இவர் நடித்த முதல் படம் குறித்து ஒரு பேட்டியில் ‘அந்த படம் சுத்த வேஸ்ட்’ என்றார்,...
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை எப்போது பார்ப்போம் என பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இந்த படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் 2 கோடி ஹிட்ஸை கடந்தது. இப்படம் மலேசியாவில் மிக பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. இதற்காக மலேசியாவில் பேருந்து, லாரிகள் என அனைத்திலும் கபாலி புகைப்படங்களை வைத்து கலக்கி வருகின்றனர்.
பல மொழிகளில் நாயகியாக கலக்கி வந்தவர் பிரியாமணி. அண்மையில் இவருக்கும் முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படத்தையும் தன்னுடைய வலைப்பகுதியில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரியாமணி. இந்நிலையில் தனது நிச்சயதார்த்தம் குறித்து ரசிகர்களின் மோசமான பார்வையால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு விசாரணை நடத்தி வரும் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே அஞ்சாத தாம், ஏனையவர்களுக்கு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாளைய தினம் நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 15 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக கடமையாற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நியமனங்களில்  தலையீடு செய்ததில்லை எனவும், பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்க...
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூர் மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது கடற்படை உயர் அதிகாரியை திட்டியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். உயர் படையதிகாரி ஒருவரை திட்டுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்படை அதிகாரியை திட்டியமை குறித்து முதலமைச்சருக்கு எதிராக...
இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் நிலவி வரும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசேல்ஸின் சமூக விவகார, சமூக அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏinஉநவெ ஆநசவைழn  தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது இரு நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மீன்பிடித்துறைக்கும் சுற்றுச்சூழல் துறைக்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகள் பாராட்டுக்குரியது என...
மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இவ்வாறு கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. மலேசியாவில் விவசாய உற்பத்த நிலையத்தில் சுமார் 5000 வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளன. இதேவேளை, சுமார் 50 பராமரிப்பாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.