வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கவே இல்லை. தல அஜித்தின் 57வது படத்தையும் சிவா இயக்க இருப்பது ஏற்கெனவே வந்த தகவல். இந்நிலையில் தல அஜித்தின் 57வது படத்தை பற்றிய தகவல் இன்று 5.7 மணியளவில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் இது நம்ம ஆளு படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பல இடங்களில் சிம்புவிற்கு ஆதரவு தரும் வகையில் பேனர், போஸ்டர் அடித்துள்ளனர். இதற்கு சிம்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தமன்னா. அதிலும் பாகுபலி படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்குஅனுஷ்காவின் நடிப்பு மிகவும் பிடிக்கும், ஒரு படத்திற்காக அவர் எடுக்கும் ரிஸ்க் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரை போல் என்னால் ஒரு போதும் நடிக்க முடியாது’ என வெளிப்படையாக கூறியுள்ளார். தமன்னா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில்பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நகர்ப்புறங்களில் உள்ள அபார்ட்மென்ட்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் நிமோனியா வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சீனாவின் நான்ஜிங்கில் உள்ளது ஸ்கூல் ஆப் எனர்ஜி என்று என்விரான்மென்ட். அதைச் சேர்ந்த பேராசிரியர் ஹுவா கியான் மற்றும் அவரது குழுவினர் நகரங்களில் உள்ள பெரிய பெரிய அபார்ட்மென்ட்களில் வாழும் குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவது குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2011ம்...
மொரட்டுவை நகரில் உடம்பு முழுதும் தீயால் எரிந்த நிலையில் உள்ள இளைஞன் ஒருவனை காணக்கூடியதாக உள்ளது. காதல் விவகாரத்தில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உடல் முழுதும் தீயால் வெந்த நிலையில் இருக்கும் இவரை சந்திக்கும் நபர்களிடம் காதலி விட்டுச் சென்ற சோகத்தில், நெருப்பு வைத்துக் கொண்டதாக தெரிவித்து வருகின்றார்.
விராட் கோஹ்லிக்கு பந்து வீசுவது கண்டிப்பாக எனக்கு கவலையளிக்கும் விடயம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவரான விராட் கோஹ்லி தற்போது ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். இந்த தொடரில் 919 ஓட்டங்களை குவித்துள்ள கோஹ்லி, 4 சதங்களும் விளாசி சாதனை படைத்துள்ளார். தனது துடிப்பான ஆட்டத்தால் பெங்களூர் அணியை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் விராட் கோஹ்லி பற்றி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி இந்த முறை "பிளே-ஆப்" சுற்றில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது. நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் 22 ஓட்டங்களால் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. இதனால் 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறிய ஐதராபாத் அணி, இறுதிப் போட்டிக்கான ஆட்டத்தில் குஜராத் அணியை இன்று சந்திக்கிறது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணித்தலைவர்...
உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் “ஜெண்டில் மேன்”விளையாட்டாகவே கருதப்படுகிறது. வெற்றி, தோல்வியின்போதும் இரு அணி வீரர்களிடையே சகோதரத்துவ தன்மையே காணப்படும். ஆனால் சில சமயங்களில் இந்த விடயம் தலைகீழாக மாறிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எதிரணி வீரர்களிடையே சிறு சிறு மோதல் காணப்படுவது வழக்கமான விடயம் என்றாலும், சொந்த நாட்டு வீரர்களே மூர்க்கத்தனமாகவும் மோதிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள வீரர்களை பற்றி பார்க்கலாம். விராட் கோஹ்லி - கவுதம்...
ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டம் முதல் அசத்தி வந்த கொல்கத்தா அணி நேற்று நடையை கட்டியது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களே எடுத்தது. இதனால் 22 ஓட்டங்களால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தோற்றுவிட்டதால், அவ்வணியின் சீயர் கேர்ள்ஸ் இருவர் கண்ணீர் சிந்திய காட்சியை அந்த அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுக்கான...
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையவிருக்கிறது. காரணம் இந்த முறை ஒரு புது அணி கிண்ணத்தை வெல்ல இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுடன் வெளியேறிவிட்டதால் கிண்ணத்தை வெல்லும் புதிய அணிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது 9வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. 2வது தகுதிபெறும் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்...