விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வியட்னாம் பிரதமர் குயுன் சான் புக்கிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்று ஜப்பான் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த வியட்னாமிய பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. நுகோயா ரோக்யூ விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் முதலீடுகளை...
  சிறிலங்கா கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வடக்கில், இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்திருந்தார். இப்போது, இரண்டாவது சம்பவமாக, கடற்படை அதிகாரிளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் அவமரியாதைக்குட்படுத்தியுள்ளார். அதுவும் அமெரிக்கத்...
  சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், 13,800 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கும். இந்த நிதி, பொலன்னறுவவில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்குச் செலவிடப்படும். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த அண்டு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுக்களில், இந்த கொடையை வழங்க...
பிரித்தானியாவில் குப்பை என ஒதுக்கி வைத்திருந்த பண்டைய கிரீடம் ஒன்றிற்கு 67 லட்ச ரூபாய் மதிப்பு இருப்பதை அறிந்த உரிமையாளர் வியப்பில் உறைந்துள்ளார். பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் குடியிருந்து வரும் முதியவர் ஒருவரை அரிய வகை பொருட்களை ஏலத்தில் விடும் நிறுவனத்தில் இருந்து சிலர் வந்து சந்தித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை அறிந்த அந்த முதியவர் தமது குடும்பத்தில் பரம்பரையாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களை அவர்களுக்கு காட்டியுள்ளார். இதனிடையே பல ஆண்டுகளாக ஒதுக்கியே வைத்திருக்கும்...
சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை அப்பெண்ணின் கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள King Fahad MedicalCity - யில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான Muhannad Al Zabn என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது இப்பெண்ணின்க ணவரும் உடனிருந்துள்ளார், அப்போது அந்த மருத்துவர் தனது...
பெண்ணை அவமதித்தாலோ அல்லது ஒரு நபரை கொலை செய்ய முயன்றாலோ அந்த செயலை செய்ய முயலும் குற்றவாளியின் உயிரை எடுக்க, சாதாரண மனிதருக்கு உரிமை உள்ளது என ஹரியானா பொலிஸ் டைரக்டர் ஜெனரல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ஹரியானாவில் கடந்த புதன் கிழமையன்று, திருமண விழா கொண்டாட்டம் ஒன்றின் போது பெண் ஒருவர் அவமதிக்கப்பட்டதாகவும் இதனால் எழுந்த மோதலில் இரண்டுக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெற உள்ளது. இதில், போட்டியிடும் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயககட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும்,...
சுவிட்சர்லாந்து நாட்டில் 4 சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட புலம்பெயர்ந்த நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Kaiseraugst என்ற நகரில் 37 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி செல்லும் 12 முதல் 14 வயதுடைய சிறுமிகளை அவர் சாலையில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, சிறுமிகளை நோக்கி அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமிகளை பின்...
கனடா நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாடகைக்கு வீடு வழங்க உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வின்னிபெக் நகரை சேர்ந்த எமி பெய்லி என்ற 6 மாத கர்ப்பிணி பெண் வாடகை வீடு ஒன்றை தேடி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு இருப்பதாக அறிந்த அவர் அங்கு சென்று உரிமையாளரை நேரடியாக சந்தித்துள்ளார். அப்போது, எமி கர்ப்பிணியாக இருந்ததை கண்டு முகம் சுழித்த உரிமையாளர்...