குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பெண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவின் தொடர்பு செயலாளரான லசந்த பெரோவின் மனைவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டாரகமவைச் சேர்ந்த குறித்தப் பெண் குடும்பத் தகராறு காரணமாக நேற்றைய தினம் தீ மூட்டிக் கொண்டதாகவும், இதன்போது இவரது கணவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளானவர் தற்சமயம் பாணந்துறை...
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு இன்று சுதந்திர சதுர்க்கத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நிவாரண பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்தார். மேலும் பல இலட்சம் ரூபா பெருமதியான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி எனும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சியில் இளைஞர் நடை பவனி ஒன்று நடைபெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து இந்த நடை பவனியை ஏற்பாடு செய்திருந்தன. இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பித்த இளைஞர் நடை பவனி, மது பாவனைக்கு எதிரான வாசகங்களை தாங்கியவாறு கிளிநொச்சி மாவட்ட...
  ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும்...
  சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. தற்போது...
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஸ்டூவர்ட் பின்னி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அசத்தி வருகிறார். அதேபோல் அவரது மனைவியான மாயண்டி லன்ஜர்ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் மாயாண்டி லன்ஜரிடம், "ஐபிஎல் போட்டிகளின் போது பின்னியை பற்றி நீங்கள் ஒன்றுமே கூறுவது இல்லை. அவர் அபாரமாக கேட்ச் பிடித்த போதும் கண்டுகொள்ளவில்லை. ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த...
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அசத்த முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளார். எதிர்வரும் யூலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட முத்தையா முரளிதரனின் உதவியை நாடியுள்ளார் நாதன் லயன். இது குறித்து அவர் கூறுகையில், இந்திய துணைக் கண்டத்தில் எப்படிபந்து வீச வேண்டும் என்று முரளி எனக்கு தெரிவித்துள்ளார். அவரிடம் பயிற்சி...
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் தடுமாற்றத்துடன் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணிக்கு ஹென்றிக்ஸ் (31), யுவராஜ் சிங், ஹொடா (21) ஆகியோர் கைகொடுக்க 20 ஓவரில்162 ஓட்டங்கள் குவித்தது. இதில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி 44 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்களில்...
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தன்னுடைய மெழுகுச்சிலையை பார்த்து வியந்துள்ளார். உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் மேடம் டுசார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. இதில் நெய்மரின் மெழுகுச்சிலையும் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆர்லான்டோவில் இது வைக்கப்படவுள்ளது. இதை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணியின் பயிற்சி மைதானத்தில் பார்வையிட்ட நெய்மர் மெய்சிலிர்த்தார். தன்னைப் போலவே இருக்கும் அந்த சிலையை பார்த்து வியந்து போன நெய்மர் அதனுடன் செல்ஃபி எடுத்து...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோஹ்லியின் காதல் கதை உலகறிந்த ஒன்று. ஆனால், அனுஷ்கா சர்மாவின் மீது காதல் வருவதற்கு முன்னால் அவருக்கு பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் மீது காதல் வந்துள்ளது. இதுகுறித்து ஜாலியாக சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலிவுட் பிரபலம் கரீஷ்மா கபூர் மீது நான் காதல் கொண்டேன், அவருக்கு இருந்த ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது படங்கள் என்றால் எனக்கு அலாதி பிரியம், ஒரு...