வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளில்
சிறுவர்கள் கஞ்சாப் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதாக சிறுவர் தொடர்பான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
போருக்குப் பின்னர் வன்னிப் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மது மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இது சமூகத்தில் பல்வேறு பாதிப்புக்களை உருவாக்கும் என்றும் எச்சரித்தனர்.
இளைஞர்கள் மத்தியில்...
கடந்த 7 நாட்களுக்கு முன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து பயணிகள் விமானம் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு 18ம் திகதி ஈஜிப்ட்ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்) புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம்...
தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் குற்றுயிராய் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர்பிழைத்து புத்த வஸ்திரத்தை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பார்ப்பதற்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள குக்கிராமத்தில் Kachit Krongyut (53) என்ற முதியவர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, 20 செமீ துளையில் பிஞ்சுக்குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
குழந்தையின் கால் மட்டுமே மேற்புறத்தில் தெரிந்துள்ளது, அருகில் சென்று உன்னிப்பாக கவனித்த இவர், உள்ளே பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அருகில் இருப்பவர்களை உதவிக்கு...
லண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் பிரச்சாரகராக செயல்பட்டுவரும் பிரித்தானியரான சாலி ஜோன்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கண்டிப்பாக தான் லண்டன் நகருக்குள் செல்ல துணிவதில்லை எனவும், அதுவும் கண்டிப்பாக ரயில் சேவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பேன்எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த...
மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில், அவரிடம் பணம் கேட்டு கணவரின் குடும்பத்தினர் தொடர் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
இதனால் துன்பமடைந்த பிரியங்கா செய்வதறியாது திகைத்துள்ளார். இந்நிலையில், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், திங்களன்று தனது 2...
பிரான்ஸில் அடுத்து தாக்குதல் நடத்தப்படவிருக்கும் இடங்கள் எது? அதிகாரிகளுக்கு கிடைத்த பட்டியல்
Thinappuyal -
பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட கணனியினை சோதனையிட்டதில், பிரான்சில் அடுத்து எந்தெந்தஇடங்களில் தாக்குதல் நடத்தப்படவேண்டும் என அத்தீவிரவாதி திட்டமிட்டிருந்த பட்டியல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை (26), நான்கு மாதத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் பொலிசார் பெல்ஜியம் தலைநகர்...
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பறக்கும் தட்டு குறித்த மர்மத்தினை வெளிப்படுத்துவதற்கு ஒபாமா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பதவி வகித்த ஜனாதிபதிகளும், ஜனாதிபதி வேட்பாளர்களும் பறக்கும் தட்டு குறித்து விவாதிப்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்குத் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்,
அமெரிக்காவில் கடந்த...
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (42), என்ற விவசாயிக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இவரது நிலத்தின் அருகே செல்லும் கால்வாயில், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இவரது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர் அடித்து செல்லப்படுகிறது. இதனால் சஞ்சய்க்கு பெருத்த நஷ்டம்...
சுவிஸ் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பேசலில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு முஸ்லிம் மதத்தை சார்ந்த மாணவர்கள், ஆசிரியைக்கு கை கொடுக்க மறுத்துள்ளனர்.
ஏனெனில், அவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லாத பெண்ணை தொட்டால், அது தங்களது மதத்திற்கு எதிரானது...
தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லொறிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நிஜாமாபாத்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது, விபத்தின் போது கார் ஓட்டுனர், தான் முன் சென்ற லொறியை முந்திச் சென்று, பைபாஸ் சாலை...