ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு நாள் மற்றும் 20 ஒவர் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியும், மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான 16 பேர் கொண்ட ஒருநாள், 20 ஒவர் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ. டோனி (அணித்தலைவர்), கே.எல்.ராகுல், ஃபசல், மணீஷ் பாண்டே, கருண் நாயர், அம்பதி ராயுடு, ரிஷி தவான், அக்ஸர் பட்டேல், ஜெயந்த் யாதவ், பும்ரா, பரிந்தர்...
இஞ்சி பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது, இதன் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில்...
பக்கத்தில் என்னுடைய மருத்துவக் கவனிப்பில் என்னோடு ஒன்றாகக் காயமுற்ற கேணல் கீர்த்தி ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரம் செயலிழக்கும் (ஒட்சிசனின்றி உயிர் காக்க முடியாத நெஞ்சதிர்வுக் காயம்) போது சாவதற்காக உயிரை இழுத்துக் கொண்டிருக்கின்றார். எங்கள் மருத்துவமனையின் வாசல் வழியில் இரு பக்கமும் உடல்கள் வரம்பு போல அகற்றப்படாமல் கிடக்க சத்திர சகிச்சையின் பின் எழமுடியாமல் கிடந்தவர்களுக்கு சேலைன் புதிதாக மாற்றிப் போட்டுவிட்டு நடு இரவில் வெளியேறினோம் என இறுதியுத்தத்தில் தனது...
  யாழ்ப்பாணம் – கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் கைதுசெய்யப்பட்ட “ரொக்” குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள் மற்றும் தொலைபேசி இரண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளினது...
அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களுக்கு இனிமேல் எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். அவசர அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் காணிகள் நிரப்புதலையும் முற்றாகத் தடை செய்யுமாறு ஜனாதிபதி அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சீரற்ற காலநிலையால் எதிர்பாராத விதமாக முழு நாடும் எதிர்நோக்கிய அனர்த்த நிலைமைக்கான...
‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; தூங்கவிடாமல் செய்வது’. -இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள். தான் கனவில் கண்ட காட்சிகளைக் கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் உண்மையாக்கி, இமாலய வெற்றிபெற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்துவருகிறார், மும்பையின் உல்லாஸ் நகரைச் சேர்ந்த பிரன்ஜல் பாட்டீல். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பிரன்ஜல் பாட்டீல், கண் பார்வையற்றவர். ஆனாலும் மகத்தான சாதனை செய்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார், 26 வயது பிரன்ஜல் பாட்டீல். பார்வையற்றவர்...
  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் இருமல் , தடுமல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துளளது. எனினும் இதுவரைக்கும் பாராதூரமான நோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமது...
  கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோகம் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், வயல் நிலங்கள் மணல் நிலங்களாக மாறியுள்ளதாக அந்த மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இ. தயாரூபன் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான அக்கராயன் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளன. 2016 ஆம் ஆண்டுக்கான அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கர்...
10.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டுக்குள் கடத்திவர முற்பட்ட பெண்கள் மூவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கப் பிரிவு அதிகாரிகள், நேற்றுத் திங்கட்கிழமை (23) அதிகாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கடத்திவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானமொன்றிலேயே, மேற்படி மூன்று பெண்களும் வருகை தந்துள்ளனர். கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த மூவரும் 40-50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்...
  தற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும், ஓகஸ்ட் 21 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில், இவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால், அடுத்த இராணுவத் தளபதியாக தற்போது சேவையிலுள்ள, ஆறு மூத்த மேஜர் ஜெனரல்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்குத் தகுதி வாய்ந்த சில மேஜர் ஜெனரல்கள்...