சீனாவின் முதலீட்டில், மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, வெள்ள நிவாரணத் திட்டம் ஊடாக உதவிப் பொருட்களை விநியோகித்து வருவதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம், தெரிவித்துள்ளது.
போர்ட் சிற்றி சகானா என்று பெயரில், களனி கங்கைக் கரையில் உள்ள சீதவத்தையில் இந்த உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
துறைமுக நகரத் திட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதுடன், மீட்புப் பணிகளில்...
சிறிலங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால், சுமார் 1.5 தொடக்கம், 2 பிலலியன் டொலர் வரையான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களுக்குப் பின்னர், சிறிலங்கா தற்போது இயற்கை அனர்த்தங்களால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்திருப்பதாகவும், 109 பேர் காணாமற்போயுள்ளதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மூன்றரை இலட்சம் மக்கள்...
சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாடுகள் மாத்திரமே இதுவரை உதவிகளை அனுப்பியுள்ளதாக, சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த, சிறப்பு அதிபர் செயலணியின் கூட்டத்தில், அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்பாக விளக்கிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்தியா, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகள் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான...
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டாவது விமானம் இன்று கட்டுநாயக்கவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதில், மின்பிறப்பாக்கிகள், கூடாரங்கள், மருந்துகள் போன்றன எடுத்து வரப்பட்டன. இவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல்...
துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும் அலுப்பாக இருந்தது. ஒரே மாதிரி வேலையைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. என்னால் வேறு தொழிலையும் செய்ய முடியாத சூழல்.
இந்தத் தொழிலை இன்னும் சுவாரஷ்யமாக மாற்றிக்கொள்வது எப்படி என்று யோசித்தேன். புதுப்...
கனடா நாட்டில் பெண் ஒருவர் உயரத்திலிருந்து குதித்து விளையாடும் போட்டியில் உயிரை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்கேரி நகரை சேர்ந்த KristinRenee Czyz(34) என்ற பெண் அபாயகராமன விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அதீத ஆர்வம் உடையவர்.
கட்டிடம் அல்லது உயரமான பாலங்களிலிருந்து பாராசூட் கட்டிக்கொண்டு குதித்து அனைவரையும் வியக்க வைப்பதில் வல்லவர்.
ஆனால், இதே விளையாட்டு அவரது உயிரையும் பறித்துள்ளது.
கடந்த மே 13ம் திகதி பாராசூட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர், இதே நகரில்...
அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே ஆபிரகாமை இவனது பெற்றோர் சேர்த்துவிட்டனர்.
அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர்.
இதனால் அவன் 2014-ம் ஆண்டு...
சுவாரசிய விடயங்களுடன் ஊடகங்களில் தோன்றுவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஒன்றும் புதிதான விடயமல்ல.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே குறும்புகள் செய்வது, வெள்ளை மாளிகை விருந்தின் போது குழந்தைகளுடன் விளையாடுவது, நகைச்சுவையாக பேசுவது என தன்னுடைய சுவாரசியமான நடவடிக்கைகளை இணையதளங்களிலும் வெளியிடுவார்.
இந்நிலையில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா, அந்நாட்டின் தலைநகரான ஹனாய்யில் உள்ள சிறிய உணவகத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல சமையல்காரரான Anthony Bourdain-...
உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹால் பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த காதல் சின்னம் ஆக்ராவில் அமைந்துள்ளது.
பளிங்கு போன்று காட்சியளித்த இந்த தாஹ்மஹாலின் நிறம் தற்போது பச்சை நிறமாக மாறி வருவதாக அறிக்கைகள் வெளியாகின.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தாஜ் மஹாலின் “இயற்கை அழகு” பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார், உத்திர பிரதேச...
ஆறாவது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்ட பின்னர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவருடன் கூட்டாக ஒரே நேரத்தில் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், வரும் 25.05.2016 (புதன்கிழமை) முதல் சட்டப்பேரவை கூடுகிறது.
காலை 11 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பார்கள்.
சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற யூன் 3 ஆம்...