வடமாகாணசபை அமைச்சர் சத்தியலிங்கத்திடமிருந்த, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் புனர்வாழ்வு அமைச்சினை மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். வடமாகாணசபை நிறுவப்படும் போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காணப்பட்ட இந்த அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த திணைக்களங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண முதல்வர் குறிப்பிட்டார். இன்று (திங்கட்கிழமை) மாலை வடமாகாண அமைச்சரவை மாற்றம்...
  சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை என்று வெளிநாட்டு காதலி தெரிவித்தார். காதல் மலர்ந்தது இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது. சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...
  யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கணவருடன் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி வயது 70 என்பவரே கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வயோதிபப் பெண்ணும் கணவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு உணவினை உட்கொண்ட பின்னர் கை கழுவுவதற்காக வீட்டின்...
  வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசும் முன்வந்துள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன. அதற்கமைய 30 படுக்கைகளை கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப்பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரண பொருட்களில் சத்தரசிகிச்சை கூடம், எக்ஸ்ரே வசதிகள் , ஆய்வு கூடம்,...
  டுபாயிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3பெண்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பெண்களும் டுபாய் நாட்டுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை , குறித்த பெண்கள் 10 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கங்களை கடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகளினால் உண்டான பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் செயலணி இன்று பிற்பகல் முதன்முதலாக கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அண்மையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. சேதமடைந்துள்ள வீடுகள், தொழில்துறை மற்றும் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்தல்...
ஸ்ரீலங்கா விஜயத்தின்போது அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக தங்களிடம் உறுதியளிக்கவில்லை என சித்திரவதைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விஷேட அறிக்கையாளர் யுவான் ஈ மென்டஸ் தெரிவித்துள்ளார். வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும் அரசின் இந்த முடிவு குறித்த புதிய தகவல்கள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பொதுவான கரிசணை...
  பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்;பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுலோசனா ரத்னாயக்க என்னும் 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது தோழியின் காதலுக்கு உதவி செய்தமை பெற்றோருக்கு தெரிய வந்ததைத்தொடர்ந்து, அவர்கள் கண்டித்தமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று (திங்கட்கிழமை) மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை, வடமாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் வடமாகாணசபை அமைச்சர்களின் செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையில், அவர்களை மாற்றி புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என, வடமாகாண சபையிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்போது, வடமாகாண சபையின் அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா? அல்லது முதலமைச்சர் உட்பட...
  கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சட்ட வல்லுநர்கள் குழு அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிகட்டபோரின்போது இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள், நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்நம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டு செப்டம்பரில்...