வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த குபேந்திரராஜா கீர்த்தனா (வயது 24) எனும் பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்கிய நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் இருந்த வேளை கணவனே கத்தியால்...
  பல வருடங்களாக உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் மயானத்தில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கமைய முதியோர் இல்லத்தில் அவரை ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட நபர் மஸ்கெலியா தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக தங்கி இருந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 70 வயது மதிக்கத்தக்க இவர் அவ்வழியாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். தொடரும் சீரற்ற காலநிலையில் மயானத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்...
உடனடி பசியினை போக்குவதற்கு மட்டுமல்லாது நோயாளிகளும் அதிகளவில் பயன்படுத்தும் பிஸ்கட்டாக கிறீம் கிறேக்கர்(Crean Cracker) பிஸ்கட் விளங்குகின்றது. ஆனாலும் இந்த பிஸ்கட் மிகவும் ஆபத்தானது என இந்த வீடியோவில் ஆதாரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பிஸ்கட் ஆனது நீண்ட நாளைக்கு மென்மை அடையாமல் இருக்கக்கூடியது. இதற்காக பிளாஸ்டிக் பதார்த்தங்களும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கலந்திருப்பதனால் அது தீப்பற்றக்கூடியதாக இருப்பதாக செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.manithan.com/news/20160523120013#sthash.uuhZF9yN.dpuf
தாய்ப்பால் பருகும் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நமக்குத் தெரியும், ஆனால் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகத் திகழும் என்பது தெரியுமா? பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு இப்படித்தான் தெரிவிக்கிறது. அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும், பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் விளங்குவதாக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டு காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் ஐ.கியூ., அதாவது...
  அறுப்­ப­தற்­கா­கவே வளர்க்­கப்­படும் மந்தைக் கூட்டம் போல மியன்­மாரின் ரோஹிங்­கியா முஸ்லிம்களை பௌத்த போின­வாதம் கையாள்­கின்­றது. தவணை முறையில் பலி ­யெ­டுக்­கப்­படும் ஜீவன்­க­ளா­கவும் இவர்கள் ஆகி­ யி­ருக்­கின்­றார்கள். பாம்புகளை அடித்தால் மட்டும் போதாது அதைப் புதைக்கவும் வேண்டும் என்று சொல்வார்கள். சில வகை நச்சுப் பாம்புகளை புதைப்பதை விட எரித்து சாம்பராக்கி விடுவதே பாதுகாப்பானது என்று விஷயமறிந்தவர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் பாம்புகள் காற்றுக்குடித்து மீள உயிர் பெற்று விடும் என்ற நம்பிக்கை கிராமத்து...
  மனம் இளகியவர்கள் இப்படங்களை பார்க்கலாம் உங்கள் மனங்களில் மதம் குடிகொண்டிருந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள் மாறாக உங்கள் மனங்களில் “மனிதம்” குடிகொண்டிருந்தால் போராடும் குணங்கொண்டு எழுச்சியடைவீர்கள். தைரியத்தை வளர்க்க நமக்கான தேவை முற்போக்குச் சிந்தனைகள் மட்டுமே,, பார்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது “மனிதம்” இது இனப்படு கொலையில்லாம் வேறென்ன? பௌத்தம்   பாசிஸத்தின் பிடியில் இருப்பதனால் பற்றி எரிகிறது பர்மாவும் , இலங்கையும் மதம் மாற்றான் கைகளிலே விளையாடுகையில் புத்தனுக்கு புதைகுழி வெட்டுவதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை காரணம் மதத்தை போதிக்காதவனே மரணித்து கிடக்கின்ற பொழுது கடவுளாக்கியவன் ஒன்டிப் பிழைக்கிறான். புத்தன் தான்தான் கடவுளென்றும் தன்னைத்தான் வணங்க வேண்டுமென்றும்...
  எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ, அதை அகற்றுவதற்கு எவரும்...
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 8வது மாநாடு வவுனியா கோவிற்குளம் , ஆதி திருமண மண்டபத்தில் நேற்று ( 22.05.2016) நடைபெற்றது. இந் நிகழ்வில் புளோட் அமைப்பின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினமான த.சித்தார்த்தன் , மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் , வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புளோட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக சென்று உமாமகேஸ்வரன் சந்தியில்...
  வவுனியா மாவட்ட உதைப்பாந்தாட்ட சங்கத்தலைவர் மீது நேற்று ( 21.05.2016) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் போட்டி நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக ஒரு கழகத்திற்கு விளையாட்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தடைவிதிக்கப்பட்ட கழகத்தினர் அவர்களுக்கு நெருக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் தெரியபடுத்திய போது, அவ் அரசியல்வாதி உதைப்பந்தாட்ட சங்கத்தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடை உத்தரவினை ரத்து செய்யும்...
வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையினால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கலைப்போட்டிகளின் மற்றுமோரு நிகழ்வு யோகபுரம் மாகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம், அரிச்சந்திர மயான காண்டம் மற்றும் சமூக நாடக போட்டிகள் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னி எம்.பி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.