ஒவ்வொன்றையும் சுகாதாரமானதாக பேணுவதற்காக பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் நம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னுள்ள ஆதாரங்களின் படி, அவை நன்மையை விட அதிகம் தீங்கையே ஏற்படுத்தக் கூடும் என்ற ஒரு கருத்தும் இருந்து வந்தது. தற்போதைய ஆராய்ச்சியில், பற்பசையிலிருந்து கைகழுவது வரை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பக்டீரியா எதிர்ப்பு பதார்த்தமாகிய Triclosan ஆனது, Zebrafish இன் உணவுக்கால்வாய் பக்டீரியாக்கள் மீது உடனடியாக தொழிற்படுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. மனித உடலும், Zebrafish உம்...
சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று, முன்னைய காலங்களில் பலவகையான புற்றுநோய்களை போக்க பயன்படுத்தப்பட்டFlavopiridol (தொகுக்கப்பட்டFlavonoid), மூளை புற்றுநோயினையும் விரட்ட பயன்படுத்தப்படக் கூடியது என கண்டுபிடித்துள்ளது. Flavopiridol ஆனது Glioblastomas தொடங்கி பெரும்பாலும் எல்லா வகையான மூளை புற்று நோய்களையும் சமாளிக்கக் கூடியது என தெரிய வருகிறது. லண்டனில் வெறும் 30 வீதமான Glioblastoma நோயாளர்கள் மட்டுமே, அதன் தாக்கம் அறியப்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். 2016 ஆம் ஆண்டளவில் 12,000 நோயாளர்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட  உருத்திரபுரம் கிழக்கு கிராமத்தின்  4ம் குறுக்கு வீதி  கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் முற்றாக  அழிவடைந்துள்ளது  . இவ்வீதி 1983ம் ஆண்டு தொடக்கம்  பெய்யும் கடும்  மழையினால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளிடம் அரசியல்வாதிகளிடமும் இந்த கிராம மக்கள் முறைபாடுகளை தெரிவித்தும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை எனவும்  கடந்தமுறை பெய்த மழையினால் வீதி...
அப்பிள் நிறுவனத்தின் பிரதான காரியாலயம் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஆனாலும் தனது வியாபாரத்தினை விரிவாக்கும் பொருட்டும், புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் பொருட்டும் பல்வேறு நாடுகளில் அதன் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக மற்றுமொரு கிளையினை தற்போது இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் ஹைதராபாத்தில் நிறுவவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை நேற்றைய தினம் அந் நிறுவனம் விடுத்திருந்தது. இப் புதிய கிளையின் செயல்பாடாக அப்பிள் மேப் சேவையினை...
கீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. முழு தானியங்கள்: முழு...
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகிவிடுவார்கள் என்று கூறப்பட்டாலும், அதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. உருளையில் அடங்கியுள்ள மாவுச்சத்தே குண்டாவதற்கு காரணமாக கூறப்படுகிறது. உருளைக்கிழங்கில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம் கொழுப்பு இதிலுள்ளது. விட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து உருளையில் மிகுந்து காணப்படுகிறது. உருளையில் எளிதில் கரையத்தக்க மற்றும் கரையாத,...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து பரந்தன் ஒன்றியம் நிவாரப் பணியினை ஆரம்பித்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகளை  பரந்தன் ஒன்றியம் 444 குடும்பங்களுக்கு வழங்கி உள்ளனர். பரந்தன் பகுதியை அண்மித்துள்ள காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள 94 குடும்பங்களுக்கும், குமரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 230 குடும்பங்களுக்கும், உருத்திரபுரம் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 120 குடும்பங்களுக்கும் இன்று ( 21.05.2016)...
சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படும் தண்ணீர் முட்டான் கிழங்கு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. பலவிதமான சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும், சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும் உதவுகிறது. இது சிறுநீர் போக்கினை தூண்டி மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும். இதற்கு இதிலுள்ள செயல் திறன்...
நீங்கள் உங்கள் இரவு ஊட்டலுக்காக மீனை பேக்கிங் பண்ணும் போதோ, காய் கறிகளை வறுக்கும் போதோ, அல்லது துண்டு இறைச்சியை தயார் செய்யும் போதோ பொலித்தீனில் கட்டி வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனால் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அப்பொலித்தீனிலுள்ள சில வகை சேர்வைகள் உங்கள் உணவுப் பதார்த்தத்தினுள் ஊடுருவக் கூடும் என்பது. இது உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக கூட இருக்கலாம். உணவுத் தயாரிப்பில் அலுமினியத்தின் பயன்பாடு தொடர்பில் ஆய்வு ஒன்று...
பல சத்துகள் அடங்கிய ஜவ்வரிசி பல வகையான உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள் ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உட்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. மருத்துவ பயன்கள் அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் அதில்...