வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் உதவிகளை வழங்க உள்ளது. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்கா மேலும் 36 மில்லியன் ரூபா பணத்தை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 7.2 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது. மனிதாபிமான உதவிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, மூன்றாண்டு திட்டமொன்றின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கத்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனர்களில் ஒருவரான திருக்குமாரன் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஐந்து மணித்தியால விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே நடேசனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் மல்வான பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியொன்று...
கட்டிட நிர்மானம் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். வீடுகள் அல்லது வேறும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றில் சட்ட மூலமொன்று நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் அடிக்கடி இயற்கை அழிவுகள் இடம்பெறும் காரணத்தினால் சில சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம்...
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளை அணிவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை சீருடைகள் இன்றியும் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதியே இவ்வாறு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மேல் மாகாண கல்வி அமைச்சரும் இவ்வாறான ஓர் அறிவிப்பினை விடுத்துள்ளார். மாணவர்கள்...
ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் பெரும் சர்ச்சைக்குள்ளான குசால் ஜனித் பெரேரா, இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள உள்ளார். வீசா நடைமுறைகள் பூர்த்தியானதன் பின்னர் குசால் இங்கிலாந்துக்கு பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் உபாதை காரணமாக நாடு திரும்புகின்றார்.இந்த வெற்றிடத்திற்கு குசால் பெரேராவை இலங்கை கிரிக்கட் அணித் தெரிவாளர்கள் தெரிவு செய்துள்ளனர். சிறந்த துடுப்பாட்ட வீரரான குசால் அணிக்கு மேலும்...
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம்,யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை.அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம்,யோகம் என்பன குறித்து பார்ப்போம். மேஷம் கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும். ரிஷபம் வேலையில் முழு மனதுடன்...
  காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும். இந்நோயானது, வயது மற்றும் பால் வேறுபாடுகளைக் கடந்து பலரையும் பாதித்தாலும் மனிதனுக்கு பாலுட்டிகள் என அங்கிகாரமளிக்கும் பாவையரில் நிகழ்கின்றபோது, பன்மடங்கு அபாயகரமானது. ஆகையினால் பூவையரின் புற்று நோய்கள், பொதுவாக யாவரை விடவும் அதிக அவதானத்தை ஈர்க்கிறது. மார்பக...
    பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?
    ஆண்கள் ஏன் இரவில் நிர்வாணமாக தூங்க வேண்டும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!