உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று (21) காலை சாதனை படைத்துள்ளார். வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சாதனையைப் படைப்பதற்காக சுமார் ஒருமாதத்திற்கு முன்பே குறித்த பெண்ணும் இவருடன் சேர்ந்து யோஹான் பீரிஸ் என்ற பெண்ணும் இந்தியா பயணித்துள்ளார்கள். இவ்வாறு சென்ற பெண்களில் ஜெயர்தி குரு உதும்பால...
இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கையளிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு நாமல் மேற்கண்டவாறு பதிலளித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாமல், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஒரு சோற்றுப் பார்சலை கையளிக்கவும் பொதுமக்கள் தயக்கமும், அச்சமும் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்தால் பொலிஸ்...
மட்டக்களப்பு-ரிதிதென்ன பகுதியில் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு BOI அனுமதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு முதலீட்டு சபையினுடைய நிறுவனமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரிதிதென்னெயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Batticaloa campus நிறுவனத்தை இலங்கை முதலீட்டு சபை (BOI) நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இன்று அங்கீகரித்துள்ளது. இதன் பிரகாரம் இன்று BOI நிறுவனத்திற்கும் Batticaloa campusற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான கட்டட வேலைகள் இப்பொழுது மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான புனானை ஜயந்தியாய...
இலங்கை அரசியல் களத்தில் தற்போது சூழ்ச்சிகள் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை ஓரம்கட்டி, சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க சூழ்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு சுதந்திர...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை இரத்துச் செய்து அதற்கு பதிலாக மக்கள் தொடர்புப் பிரிவை மீள் அறிமுகம் செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வகையில், பாதுகாப்பு பிரிவுகளுக்குள் ஊடகத் தொடர்பு பிரிவு மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்த பதவியேற்றுக் கொண்டவுடன்...
இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாமனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவு தேசம் சிதைந்து போய் இருக்கிறது. இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு...
திருகோணமலை ஆலங்கேணி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி 1500 மில்லி லீற்றர் மதுபானத்தினை கொண்டு சென்ற நபருக்கு 12,000 தண்டப்பணமும் அதனை செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேற்று (20) பிறப்பித்துள்ளார். கிண்ணியா ஆலயங்கேணி பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மதுபானத்தினை நடுஊற்றுப் பகுதிக்குச் கொண்டு சென்ற 54 வயதுடைய குறித்த நபரை கிண்ணியா பொலிஸார் வியாழக்கிழமை (19) இரவு கைது செய்து நேற்று...
  இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமற்போன, எழிலன் உள்ளிட்டவர்களின் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளின் போதே முல்லைத்தீவு மாவட்ட...
  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக அவரிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வுத் துறையினர், நேற்று மாலை மீண்டும் அவரை சீ.ஐ.டி....
நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல கேள்விக்கான தருணத்தில் சபையில் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில , நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடுமாறு கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். இவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, நிதிக் குற்றப் பிரிவில் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதிகாரிகளின் விபரங்களை வெளியிட...