கச்சத்தீவை மீட்க கோரும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்குடன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவை மீட்க கோரி கடந்த 2008ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளும் உச்ச...
மாத்தளை சித்தாங்கட்டி முருகபெருமான் ஆலய கொடியேற்றம் மிக சிறப்பாக நேற்று (20) நடைபெற்றது. இதனை தெடர்ந்து ஆலயத்தில் மூன்று நாட்கள் அலங்கார திருவிழா இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்று (21) ஆலயத்தில் விஷேட பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்கார திருவிழாவை முன்னிட்டு சுவாமி உள்வீதி வலம் வருதல் நடைபெறவுள்ளது. மாத்தளை சித்தாங்கட்டி அலங்கார திருவிழா நாளை (22) தீர்த்ததுடன் இனிதே நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீரை சுத்திகரிக்கும் வில்லைகளை ஜப்பானும் இந்தியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவியாக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் சர்வதேச கூட்டிணைவு நிறுவனமான ஜெய்க்கா, போர்வைகள், பிளாஸ்டிக் விரிப்புக்கள் தண்ணீர் தாங்கிகள், உட்பட்ட பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த பொருட்களுடன் ஜப்பானின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒன்றும் இலங்கை வந்துள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் சி 17 விமானம் படுக்கை விரிப்புக்கள், நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் உட்பட்ட...
ஆசிரிய உதவியாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக ஆசிரிய உதவியாளர்கள் மத்தியில் கடந்த மாதம் கல்வி அமைச்சினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி நாட்டிலுள்ள குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் தமக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக் கிடைக்கவுள்ளதாக எதிர்பார்த்திருந்தார்கள். இருந்த போதும் இந்த மாதச் சம்பளத்துடன் மேற்படி சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தாம் இந்த முறையும் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளார்கள். மிகமிகக்...
அனர்த்தங்களால் உயிரிழந்த அரச ஊழியர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, அரச மற்றும் மாகாண தொழிற்சங்க சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அனர்த்தத்திற்குள்ளான அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை திரட்டுவதற்கான மத்திய நிலையங்களை மாகாண மட்டத்தில் நிறுவியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட கர்தினால் இது பற்றி அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தம் கூறுகையில், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு இதனால் லட்சக் கணக்கானவர்கள் இருப்பிடங்களை இழக்க நேரிட்டுள்ளது. உயிரிழப்புக்கள், காணாமல்...
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார். பிரதி ஊடக அமைச்சின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் தொடாந்தும் ஊடக அறிக்கையில், நாட்டில் தேசிய அனர்த்த நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை புரிந்து கொண்ட இலத்திரனியல் அச்சு மற்றும் சமூக வலையமைப்பு ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி வருகின்றன. பல்வேறு வழிகளில் பல்வேறு பயனுள்ள...
தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் தன்னை அடையாளம் காட்டியுள்ளார் ஜெயலலிதா. துணிச்சலுடன் இவர் வகுத்த வியூகங்கள் வெற்றி பெற, முதல்வர் பதவியை தக்க வைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார். மைசூரில் 1948 பெப். 24ல் ஜெயலலிதா பிறந்தார். தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பெங்களூரில் உள்ள 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். 4 வயதில் இருந்து பரத நாட்டியம், கர்நாடக இசை பயின்றார்....
மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 350 சிறுவர் சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 350 சிறுவர் சிறுமியர் நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை துணை மாவட்டச் செயலாளர் சமன் அனுர தெரிவித்துள்ளார். சில சிறுவாகளின் பெற்றோர் இருவரும் இறந்துள்ளனர். மேலும் சிலரின் பெற்றோர் காணாமல் போயுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாடிய வீட்டு முற்றம், விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை வாழ்க்கை என பல்வேறு விடயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சிறுவர்கள்...
இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய காலநிலையின் அடிப்படையில் இந்த மாதம் முழுவதிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும் என கொழும்பு பத்திரிகையொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். பருவப் பெயர்ச்சி மாற்றங்களினால் தொடர்ச்சியாக இவ்வாறு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என...