புனித வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் பௌத்தர்கள் பல்வேறு புண்ணிய காரியங்களில் இன்று ஈடுபடுவர். இதேவேளை இன, மத, மொழி மற்றும் சாதி வேறுபாடின்றி சமத்துவத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை மனித மனங்களில் விருத்தியடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வெசாக் தின செய்தியிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. நிதானமான அறிவு, கருணை, அன்பு, நடுநிலைமை மற்றும் எளிமை எங்குள்ளதோ அங்குதான் உண்மையான பௌத்த...
தடைப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது கடுகண்ணாவை மற்றும் ரம்புக்கனை இடையிலான ரயில் மார்க்கம் ரயில் போக்குவரத்திற்காக தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். இதனடிப்படையில் உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ஆகிய ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிலவும் சீரற்ற வானிலையினை கருத்திற் கொண்டு இரவு நேர தபால் ரயில் சேவை மாத்திரம்...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனமும் உதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், என்பனவற்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவர் குழுக்கள் உள்ளிட்ட நிவாரணப் பணியாளர்களும்...
இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து 11 மாவட்டங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் கள தரவு சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்துரைத்த அவர், களத்தின் தேவைகளை பொறுத்து இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபினமான விடயங்களுக்கான...
யாழ் மண்ணிலே தென்மராட்சி, கொடிகாமம், கச்சாய் பகுதியில் குடிகொண்டிருந்து பக்தர்களுக்கு அருளையும் மற்றும் புதுமைகளையும் புரியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் மற்றும் காவடி நிகழ்வு என்பன நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வுகள் வருகின்ற திங்கட்கிழமை 23.05.2016 நடைபெறவுள்ளது. காலை 07.30 மணியளவில் காவடி ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் காவடி ஆட்டம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இரவு 08.15 மணியளவில் பண்டம் எடுத்து அதனைத் தொடர்ந்து பொங்கல்...
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரஜைகள் குழுக்களின் ஒன்றியத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் நடைபெற்றது. வவுனியா, மன்னார் பிரஜைகள் குழுவினரும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையமும் இணைந்து தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில், தமக்கான மாவட்ட இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு வன்னி பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். தற்போது வன்னிப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைகள், காணாமல் போனோர் பிரச்சினைகள், அரசியல்...
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார். இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேகநபரான குறித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த வாரம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின்னர் இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு முதல் தடவையாக பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இருவரும் பயணத்தை மேற்கொண்டதன் நோக்கம் வெவ்வேறானதாகக் காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பை ஏற்று ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்றார். கடந்த...
தேசிய தலைவரின் இருப்பினை உறுதிப்படுத்தும் ஆதாரம்-காணொளி
  வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்கூறியுள்ளார். இன்றைய தினம் காலை 11 மணிக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின்தலைவர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது விட யமாகமுதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,முல்லைத்தீவுமாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில்மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை கூறியிருக்கின்றனர். இதனடிப்படையில்முதலமைச்சரின்செயலாளர்,...