அஜித் அடுத்து சிவா இயகக்த்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து இதுநாள் வரை எந்த ஒரு செய்தியும் வரவில்லை. இப்படத்திற்கு அனுஷ்கா ஹீரோயின் என்பது மட்டுமே 90% முடிவாகியுள்ளது, அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடல் எடையை ஏற்றினார். இதனால், அடுத்தடுத்து சில படங்களின் வாய்ப்பை இழந்தார், தற்போது அஜித் படம் என்பதால் தன் உடல் எடையை அனுஷ்கா உடனே வேகமாக குறைந்த வருவதாக கூறப்படுகின்றது.
சூர்யா 24 படத்தின் மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் S3 விரைவில் வெளியாக இருக்கிறது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றியால் தற்போதுரஜினி படத்தையே இயக்கி வருபவர் ரஞ்சித். இப்படம் மூலம் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். கபாலி படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் ஒரு புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இப்பட தகவல் உறுதியானால் ரஜினி...
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சினிமா துறையினர் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலதிவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு திரையுலகிலிருந்து முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளார்நடிகர் சிவகுமார். முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர வெற்றிக்காக அவருக்கு மலர்க்கொத்தும் அனுப்பியுள்ளார். தேர்தலில் வாக்களித்துவிட்டு சிவகுமார், குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள். யார் ஜெயித்து வந்தாலும்...
பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான். ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது. தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு. இதில் விட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து...
பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது. இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். காரணம் என்ன? ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற...
கிட்டத்ததட்ட இரு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் படி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (GM/GE) உட்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிய வருகிறது. இதற்கென கடந்த 30 வருடங்களாக வெளிவந்த, 900 ஆய்வுப் பத்திரிகைகள் பகுத்தாரயப்பட்டிருந்தது. அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அமெரிக்க தேசிய கல்விக் கூடங்களால் நியமிக்கப்பட்ட 20 விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1980கள் தொடக்கம் விஞ்ஞானிகள் விட்டமின் உள்ளடக்கம், அதிக விளைச்சல், பீடைகளுக்கு எதிர்ப்பாற்றல்...
தாயிடம் பால் கொண்ட பிள்ளையை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்’ என்ற வைரமுத்துவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஈழத்தின் இறுதிக்கட்ட போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முள்ளிவாய்க்கால் கிராமத்தில் மே 17 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு உறுதி செய்து போர் முடிவுற்றதாகப் பிரகடனப்படுத்தியது. இறுதிப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழீழ அமைப்புகள்,...
  கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இடம்பெயர்ந்த தனது வீட்டாரை காணாது உணவின்றி சேற்று மண்ணில் காத்திருந்த நாய் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தனது வீட்டாரை காணாது எங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருப்பதை காணமுடிந்தது. இறுதியில் தனது வீட்டார் முகாமில் இருப்பதை நாய்...
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அனர்த்த முகாம்களில்தங்கியிருக்கும் மக்களுக்காக பல அமைப்புக்கள்,அரச நிறுவனங்கள்,தனியார்அமைப்புக்கள் ,ஊடகநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் என்பன நிவாரணம்வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இந்நிலையில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனனான தஹம் சிறிசேனவும் நிவாரணப் பணிகளைமுன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொழும்பு கோட்டையில் அமைந்திருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு நிவாரணப்பொருட்களை கொண்டு வந்து தரும்படி தஹம் சிறிசேன தனது பேஸ்புக் வலைத்தளத்தில்பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிரிகளை வைத்துள்ளவர் விஜயதாரணி. ஆனால் அதையும் மீறி, தேர்தல் போட்டிகளையும் மீறி, சவால்களைச் சந்தித்து 2வது முறையாக எம்.எல்.வாகியுள்ளார் விஜயதாரணி. விளவங்கோடு தொகுதியையும் தக்க வைத்துள்ளார். கன்னி்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயதாரணியின் தாத்தா மறைந்த கவிமணி தேசிகவிநாயகம் ஆவார் (இவரது பெயருக்குப் பின்னால் ஜாதியைச் சேர்ப்பது அவர் சுவாசித்த தமிழுக்கு இழுக்கு என்பதால் ஜாதிப் பெயரைச் சேர்க்கவில்லை). ஆனால் கட்சியில் சுயம்புவாக வளர்ந்தவர் விஜயதாரணி. கடந்த 2011...