மும்பையைச் சேர்ந்த பிரபல டெலிவிஷன் நடிகை பிரதியுஷா(வயது 24) கடந்த மாதம் 1–ந் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார். அவருடைய காதலரும், டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ராகுல்ராஜ் சிங் தூண்டுதலின்பேரில் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ராகுல்ராஜ் சிங் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில், அவருடைய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி பிரதியுஷாவின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில்...
  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமையினால் அனைத்து அரச பணியாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. எனினும் குறித்த விடயத்தில் மாற்றம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குறித்த சீரற்ற காலநிலையால் அதிகமான அரச பணியாளர்கள் நாடு பூராகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் அவர்களது விடுமுறையை இரத்து செய்வதில் நியாயம்...
  நேற்றைய தினம் (19-05-2016) பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
  நிலம் கீழ் இறக்கத்தால் 25 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் இடம் பெயர்வு…! கண்டி மாவட்டம் தெல்தோட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெல்தோட்ட குரூப் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கிவுள்ளதால் 25 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து கலஹா தெல்தொட்ட குரூப் திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லயன் இலக்கம் 01, லயன் இலக்கம் 02, வீட்டு குடியிருப்பு...
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வூமராவிலும், நோர்வேயில் அன்டோயா ராக்கெட் தளத்திலும் சோதனை ஓட்டங்கள் நடந்தன. அந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. சிட்னியில் இருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறந்தது. இவற்றிக்கு இடையேயுள்ள தூரம் 17 ஆயிரம் கி.மீட்டர் ஆகும். இதில்...
  இங்கிலாந்தின் Tyne & Wear பிராந்தியத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் நாய் கடித்து காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Tyne & Wear பிராந்தியத்தின் Northumberland பகுதியில் உள்ள Blyth பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, நேற்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிளவில் ஸ்டேஃபோர்ஷெயர் புல் டெரியர் வகை நாய் சிறுவர்களைக் கடித்துள்ளது. இதனையடுத்து காயங்களுக்கு இலக்கான சிறுவன் ஒருவனின் தந்தை நிதானமாகவும் துரிதமாகவும் செயற்பட்டு, குறித்த...
சிவனொளிபாத மலை பருவகாலம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நிறைவு பெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக சிவனொளிபாதமலை மகாநாயக தேரர் பெக்மமுவே தம்ம தின்ன தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி பெல்மடுல்ல ரஜ விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்டு கடந்த 6 மாத காலமாக சிவனொளிபாதமலையில் வைத்து வழிபட்ட சமன் தெய்வதிருவுருவகும்பம் இரத்தினபுரி வழியாகவும் ஹட்டன் வழியாகவும் மீண்டும் பெல்மடுல்ல ரஜ...
  சீரற்ற காலநிலையுடன் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக 99 ஆயிரத்து 238 குடும்பங்களை சேர்ந்த நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 806 பேர் 611 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்தில்...
  இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கொழும்பிற்கு வந்துள்ளது. அதேவேளை, சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய பிரமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவும் எனவும் சகல விதத்திலும் உறுதுணையாக இருக்குமெனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கைக்கு அவசர நிவாரணகள் வழங்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையின் பேரிலே நிவாரண...
ரோனு புயல் தற்போது காங்கேசன்துறை பிரதேசத்தின் அருகே 900 கிலோ மீட்டர் அளவில் வடக்கில் மையங்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது மேலும் நாட்டை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்றைய தினம் 100 தொடக்கம் 150 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை சுற்றிவுள்ள கடலில் காற்றின் வேகம், மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை...