இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நாடுகளிடமிருந்து மருத்துவ சேவைகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் மக்கள் வெளியேறிவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களை தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடகங்களின்...
வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிகமானவர்கள் வௌ்ளத்தில் சிக்கியுள்ளமை தொடர்பில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்புடன் மீட்பதற்காக போதுமானளவு படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் காணப்படுமானால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது...
மலையக ரயில் பாதையின் இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் நிலம் தாழ் இறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனை இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கொழும்பிலிருந்து கண்டி, பதுளை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் ஏதோவொரு மூலையில் ஏதாவதொவொரு அனர்த்தம் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூறாவளி, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏன் இடம்பெறுகின்றன என மனிதன் சிந்திப்பதில்லை.
அவ்வாறு சிந்தித்தாலும் அதற்கு விஞ்ஞானக் காரணங்களைக் கூறிவிட்டு மனிதன் அதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றான்.
ஆனால், மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற சில விடயங்களும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணமாகவுள்ளது.
இன்னென்ன விடயங்கள் புரியப்படுகின்றபோது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென்று இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர்...
ஸ்ரீலங்காவில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மீட்பு பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நாவின் ஸ்ரீலங்கா அலுவலக ஒருங்கிணைப்பாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான செய்திகள் தமக்கு...
தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ரோணு’ சூறாவளியால் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இலங்கையின் வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ அவ்வப்போது பெய்யும் அறிகுறி உள்ளது.
அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டைமாவட்டங்களிலும் ஏனைய சிலபிராந்தியங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன்...
யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
வடக்கில் உலர் வலய விவசாயம் தொடர்பான காத்திரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த உதவியின் கீழ், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்று அமைக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பண்ணை மற்றும் அதற்குத் தேவையான கருவிகளும் வழங்கப்படும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு...
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் அழிவுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீனா அனுதாபம் தெரிவித்துள்ளது.
நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்த சீன தூதுவர், யி சியான்லியாங், சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சிறிலங்காவுக்கு நிவாரணப் பணிகளில் உதவவும், மீள்கட்டுமானப் பணிகளில் உதவவும் சீனா விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சீனா...
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவசர உதவிகளை அனுப்பி வைக்கவும் உததரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மோசமான காலநிலையால், சிறிலங்காவில் உயிர்களை இழந்தவர்களுக்காக ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரகால அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.