சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவிலும், களனி கங்கை பெருக்கெடுத்து கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலும் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டு தீவிரமான தேடுதல், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பின் கொலன்னாவ,...
  தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகளை நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு போர் வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
இலங்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால், சுவிஸர்லாந்தில் உள்ள இலங்கை அகதிகளை அங்கு திருப்பி அனுப்ப முடியாது எனவும் சுவிஸ் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Frau Sibel Arslan தெரிவித்துள்ளார். சுவிஸர்லாந்து பாராளுமன்ற முன்றலில் இன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  
சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார அபிவிருத்தியில் Hartley கல்லூரியின் பங்களிப்பு,இலங்கை முழுவதும் அறியப்படும் ஒன்றாகும். நமது சமூகத்திற்கு Hartlety கல்லூரி ஆற்றிவரும் சேவைகள் அளப்பெரியது. எப்போதும் போல், இன்றும் Hartley கல்லூரியின் ஊடாக மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், சட்ட நிபுணர்கள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இன்னும் பல இடங்களில் சமுதாய சேவையாளர்களை இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது. Hartley கல்லூரியினுடைய பழைய மாணவர் சங்கமானது பல நாடுகளில் வியாபித்து இருக்கிறது. அதிலே...
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு பேரை கொலை செய்த குற்றவாளியை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ள பொலிசாருக்கு 1.47 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் கடந்த டிசம்பர் 21ம் திகதி 48 வயதான தாயார், அவருடைய 19 மற்றும் 13 வயதான இரு மகன்கள் மற்றும் மூத்த மகனின் 21 வயதான காதலி ஆகிய 4...
அனர்த்தம் ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் எச்சரிக்கைவிடுத்தவுடன் குறித்த இடத்திலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையினை கடற்படை அதிகாரிகள் விடுத்துள்ளனர். அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் குறித்த இடத்திலிருந்து வெளியேறாத மக்களேஅனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். இவ்வாறு வெள்ளநீரால் சிக்குண்டவர்களை மீட்பதற்கு இராணுவம் கடும் பிரயத்தனங்களைசெய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திடீர் அனர்த்தங்கள் தொடர்பில் கடற்படையினர் அலுவலக இலக்கமான0112445368,0112-212230,0112-212231...
சர்வதேச அளவில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ளது. உலகளவில் 27 நாடுகளை சேர்ந்த 27,000 நபர்களிடம் இது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சுமார் 80 சதவிகித மக்கள் ‘ஆதரவற்ற நிலையில் புகலிடம் கோரி வரும் அகதிகளை ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர். அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் அவர்களுக்கு கூடுதலான வளர்ச்சி பணிகளை...
நேற்று பெய்த மழையினால் கொழும்பின் பல பிரதான பகுதிகள் நீரில் மூழ்கின. இன்றும் அதே நிலைமை நீடிப்பதுடன் களனி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் நிலைமை மேசமாகியுள்ளது. களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடிய சத்தியம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 3 இலட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில்...
லிந்துலை, சென்கூமஸ் லெமினியர் தோட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 07 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அங்கிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி 36 பேரும் கொழுந்து மடுவத்திலும் பொது இடங்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால் குடியிருப்பு பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த முகாமைதுவ அதிகாரிகளால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்...