உலகின் பிரம்மாண்டமானதிரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் பெற்றது கேன்ஸ் திரைப்பட விழா. இதில் கடந்த14 ஆண்டுகளாக கலந்து கொண்டு இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய். இந்த விழாவின் முதல் நாளின் போது, Golden நிறத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய உடை அணிந்து அனைவரையும் கவர்ந்து விட்டார். Aishwarya Rai Bachchan At Cannes Film Festival 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் நடாத்திய அட்டகாசத்தில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாவற்கொடிச் சேனையில் 3 வீடுகளும், காந்தி நகரில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதில் 3 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உணவுப் பொருட்கள், தொழில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கென வழங்கப்பட்ட வீடு ஒன்றும் அடங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரதேசத்துக்குட்பட்ட...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து செயற்படுவதன் காரணமாக உலக நாடுகளிடம் இலங்கைக்கு முக்கியமான இடம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அன்று நிதியுதவிகளை வழங்காத நாடுகள் கூட தற்போது நிதியுதவியை வழங்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டுச வங்கி ஒப்பந்தம் தொடர்பான சட்டமூலம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே நிதியமைச்சர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி...
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி மீண்டும் சதம் விளாச ’டாக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி பெங்களூர் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்- பெங்களூர் அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் பஞ்சாப் அணியின் தலைவர் முரளிவிஜய் வென்ற நிலையில் அவர் முதலில் பந்துவீச முடிவு...
நடிகர் கருணாஸ் சமீபத்தில் தான் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து ஆளுங்கட்சி சார்பாக தமிழகத்தின் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டார். சமீபத்தில் வந்த தகவலின்படி 10,524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாராம். கருணாஸ் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை. நடிகர் சங்க தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற கருணாஸிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றதாம்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தனி நபர்களுக்கு உரிமை கிடையாது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்புவதற்கு என நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அமைப்புகள் என்ற போர்வையில் தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றமை...
தமிழ் சினிமாவில் நாள்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன அதை எல்லாம் தெரிந்து கொள்வதில் மக்களும் ஆர்வமுடன் தான் இருப்பார்கள் ஏனெனில் சினிமாவிற்கு அந்த அளவிற்கு மவுசு இருகின்றது. அவ்வாறு போன வாரம் சினிமாவில் என்ன நடந்தது என்பது பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி இதில் தெறி சாதனை, நெட்டிசன் ரகளை, புது படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன பல தவல்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கி...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் இரு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். இதில் சந்திரகாந்தனின் பிணைமனு மீதான விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதியும், பிரசாந்தனின் மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 16ஆம் திகதியும் மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி...
அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும், இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காயமடைந்தவர்கள் அவிஸ்ஸாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரிய நாட்டு தூதுக்குழுவொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சரை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. குறித்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதார துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, ஆஸ்திரிய நாட்டுப் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர்...