சில தினங்களுக்குப் பிறகு அநுராதபுரத்தில் சீரான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 15ஆவது பௌர்ணமி தினத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர நகராதிபதி டி.பீ.ஜீ.குமாரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் நகருக்கு வரும் பயணிகள், அநுராதபுரம் பகுதியில் உள்ளவர்கள் குளங்கள், வாவிகளிலுள்ள நீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த கால்வாய்கள் மற்றும் குளங்கள், வாவிகளில் சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல...
கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை மற்றும் காற்றினால் இலங்கையின் பெரும் பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.
இந்த அனர்தங்களினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சப்ரகமுவ மாகாணமும் ஒன்றாகும்.
இந்த மாகாணத்தின் பலாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள அல் மினாரா வித்தியாலயத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் இணைப்பு கம்பியானது காற்றினால் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
எனினும் இது தொடர்பான கடந்த ஐந்து தினங்களாக இலங்கை மின்சார சபையின் பலாங்கொடை கிளைக்கு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டுவந்த போதிலும்...
பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க...
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.
மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.
அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை...
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளின்போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போர்முடிவடைந்த ஏழாவது நினைவுநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.
இலங்கையில் போர்முடிவடைந்தநாளை நினைவுகூரும்போது 26 வருட போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பலரை தாம் சந்தித்தவேளையில் அவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தரும் செய்திகளை கூறினார்கள்
எனவே பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் ஆற்றப்படுவதற்காக கடுமையான...
அதிமுக வெற்றிக்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருவேன் என்று கூறியுள்ளார். அதிமுக 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற தகவல் வெளியான நிலையில் மதியம் 12.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப ஆட்சிக்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கானவாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில்இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி பின்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றிட்கு பல இலட்சம் மக்கள் முகம் கொடுத்து பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கும் நிலையில்,அனர்த்தங்கள் இடம்பெற்ற இடத்திலிருந்து செல்பி எடுத்து ஒருசிலர் மகிழ்வதை சிங்கள ஊடகம் ஒன்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
இதை பார்க்கும் போது இப்படியும் மனிதர்களா? என எண்ணத்தோன்றுகின்றது.
அனர்த்த இடங்களை பார்வையிட சென்றவர்களே இவ்வாறு செல்பி எடுத்து வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
புத்தளம்,கொழும்பு,அரநாயக்க ஆகிய இடங்களுக்கு செல்லும் குழுவினரே...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக - 126
திமுக. - 95
பா.ம.க. 6
மக்கள் நல கூட்டணி - 0
பா.ஜ.க. - 0
திமுக. - 94
பா.ம.க. 6
மக்கள் நல கூட்டணி - 0
பா.ஜ.க. - 0
இதைத் தொடர்ந்து மீண்டும்...