அதிக மழையுடனான காலநிலையினைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் நிரம்பியுள்ள வீடுகள் மற்றும் கடைகள், நிறுவனங்களுக்குச் சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக 119 என்ற இலக்கத்தை அழைத்து அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தமது முறைப்பாட்டினை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை,...
தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருப்பது விஜய், அஜித் தான். சமீபத்தில் வந்த பல படங்களில் இவர்களுடைய Reference இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் டீசர் வந்தது. இதன் ஆரம்பத்திலேயே வேதாளம், தெறி டீசர் போல் ஆரம்பிக்கின்றது. உடனே ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு, நம்ம ஸ்டைலுக்கு வாங்க’ என்று கூறி, சந்தானம் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது வந்த வசனத்தை கூறுகின்றனர். இந்த...
தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்ராதிகா ஆப்தே. நடித்த ஒரு சில படங்களிலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. கபாலி படத்தில் நடித்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ரஜினி சாருடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம், அவர் மிகவும் எளிமையானவர். மேலும், இந்த படம் வழக்கமான ரஜினி படம் போல் இருக்காது, மசாலா காட்சிகள் பெரிதும் இருக்க வாய்ப்பில்லை. இதில் வேறு ஒரு தளத்தில் சூப்பர் ஸ்டாரை நீங்கள்...
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்ஞானவேல் ராஜா. இவர் வெளியிட்ட 24 படத்தின் திருட்டு விசிடியை பிரபல திரையரங்கே எடுக்க அனுமதித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று ஞானவேல் ராஜா, விஷால், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். இதில் பேசிய ஞானவேல் ராஜா ‘ஒரு பேருந்தில் மனிதன் படம் ஓடியதால், அவர்களை பிடித்து போலிஸில் ஒப்படைத்தார்விஷால். மனிதனுக்கும் விஷாலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது, அவர் தமிழ் சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று...
ஈட்டி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் அதர்வா. அடுத்து இவர் பத்ரி இயக்கத்தில் செம்ம போத ஆகுது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைத்து வரும் யுவன், ஒரு செம்ம கிளப் சாங் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கு முதன் முறையாக ஸ்டெண்ட் இயக்குனர்திலீப் சுப்புராயனை வைத்து படமாக்கியுள்ளார்களாம். ஏனெனில் இந்த பாடலில் அதர்வா சண்டைப்போடுவது போல் வருவதால் இந்த முடிவாம்.
சூர்யா நடித்த 24 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை இப்படத்திற்கு சுமாரான வெற்றியை தான் கொடுத்தார்கள். இதனால், அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படத்தை சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகின்றது. ஏனெனில், திரிவிக்ரம் தெலுங்கில் முன்னணி இயக்குனர் என்றாலும், அவர் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்ற அச்சத்தில் இந்த படத்தில் சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வந்த படம் 24. இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான கதைக்களத்துடன் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வெளிமாநிலங்களில் வசூல் சாதனை படைக்க கேரளாவில் தற்போது வரை ரூ 9.1 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆனால், தெறி ரூ 15 கோடி வசூல் செய்ய இந்த சாதனையை 24 முறியடிப்பது மிகவும் கடினம் தான். எப்படி பார்த்தாலும் 24 கேரளாவில் மிகப்பெரும் லாபம் தானாம்.
இந்திய சினிமா என்றாலே வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஹிந்தி படங்கள் மட்டுமே தெரியும். தமிழ் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் ரஜினி மிக முக்கியமானவர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் கபாலி படம் தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 2000 திரையரங்கில் வெளிவருகிறதாம். மேலும், இதுவரை வேறு எந்த படமும் இந்தியாவில் ஒரு பகுதியில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கண்டு பல கான் நடிகர்கள் அதிர்ந்து விட்டார்களாம்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. கொழும்பில் இன்று காலை முதல் இடைக்கிடை மழையுடன் கூடிய வானிலை நிலவும், அதேவேளை மலையகத்தின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவுகின்றது. இதனால் கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. களனி ஆறு பெருக்கெடுத்தமையே இந்த வெள்ளத்திற்கான காரணமாகும். இதன்படி, வெல்லம்பிட்டி, சேதவத்தை, கொலன்னாவை, கடுவெல, ஹங்வெல்ல மற்றும் களனி ஆகிய...
இலங்கையின் மீன்வளத்தை கொள்ளையடிப்பதன் ஊடாக வருடாந்தம் 840 கோடி ரூபா வருமானத்தை இந்திய மீனவர்கள் அபகரித்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பிராந்திய கடலில் தினமும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழமையாகிவிட்டது. இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், அரசியல் அழுத்தங்களின் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றார்கள். இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வருடமொன்றுக்கு 840 கோடி ரூபா பெறுமதியான இலங்கையின் மீன்வளம்...