யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு மற்றும் மர நடுகையையும் சித்தாண்டியில் நேற்று நடைபெற்றது. சித்தாண்டி பொதுமக்கள் மற்றும் வானவில் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து சித்தாண்டி பொது மைதானத்தில் இதனை நடத்தினர். நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட முறையில் அரச பாதுகாப்பு படை, மற்றும் வன்னி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான 7வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலிகள் பல்வேறுபட்ட வடிவங்களில் நடைபெற்றாலும் குறித்த கிராமத்து மக்கள்...
போரில் உயிரிழந்தவர்களுக்கு த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாத உரையின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வெள்ளமுள்ளிவாய்க்காலில் நள்ளிரவில் உயிரிழந்த மக்களுக்காக நான் இரங்கல் தெரிவிக்கின்றேன். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஊடாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பயணம் செய்யும் போது எவ்வாறு நட்டம் ஏற்பட்டது. 2006ம் ஆண்டில் 479 மில்லியன் ரூபாவும் 2008ம் ஆண்டு...
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை மீள்குடியேற்ற திட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முசலி சந்தை கட்டிடம், கடந்த பல மாத காலமாக பராமரிப்பு அற்ற நிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் ஊடாக பணம் ஒதுக்கீடு செய்து, முசலி பிரதேச சபையினால் குறித்த சந்தை நிர்மாணிக்கப்பட்டது. எனினும் குறித்த சந்தை இது வரைக்கும்...
சஞ்சு சிரந்த என்று அழைக்கப்படும் புளுமென்டல் சஞ்சு நேற்றைய தினம் துப்பாக்கி ஒன்றுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலே இவர் நேற்றைய தினம் சரணடைந்துள்ளார். இதேவேளை தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தெமட்டகொட சமிந்த மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் புளுமென்டல் சஞ்சுவிற்கு தொடர்பு இருப்பதாகவும், பொலிஸார் இவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று சந்தித்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அங்கு தங்கியிருந்த மக்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார். நீண்ட கால தீர்வு பற்றாக்குறைகளால் தொடர்ந்தும் இவ்வாறான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். வருகைத் தந்த ஆளுநர் மக்களுக்கு...
கம்பளை அம்புலுவாவவத்தகடையில் திடீர் என ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதம்டைந்ததுள்ளதுடன், அங்கு வசிக்கும் சுமார் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்த சுமார் 80 பேர் தற்காலிகமாக சிங்கபிட்டிய புத்தர் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். குறித்த பகுதியில், சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து போடப்பட்டு வரும் குப்பை மலைப்போல உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களிற்கு முகம்கொடுத்துள்ளனர். திடீர் என்று ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மலைபோல உயர்ந்த...
தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராய்தல், மற்றும் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனவலகேவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நிவாரண பணிகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாக அதிக நேரம் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் காரியாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதேவேளை, எந்தவொரு அரச துறை...
பாரிஸில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Airbus A320 என்ற இந்த விமானம் பாரிஸில் இருந்து உள்ளூர் நேரப்படி 11.09 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதில், 59 பயணிகளும், 10 விமான ஊழியர்களும் அடங்குவர், எகிப்தின் தலைநகரான கெய்ரோவை சென்றடைவதற்கு முன்னர், 10 மைல்கள் தொலைவிலேயே விமானத்தினுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியில், எகிப்து நாடு ஈடுபட்டுள்ளது.
கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த புது ஜனநாயககட்சியின் எம்.பி. Ruth Ellen Brosseau மற்றும் பிரதமர் ட்ரூடோவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் இச்செயலுக்கு...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் அதிமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும் சமநிலையில் முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்தில் அதிமுக முன்னிலை பெற்றது. திமுக பின்னடவை சந்தித்தது. இரண்டு மணி நேர வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அதிமுக 140 தொகுதிகளிலும்,...