பிரித்தானியாவில் நடைபாதை ஒன்றில் குற்றுயிராக கிடந்த நபரை சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் பட்டப்பகலில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று ரத்தவெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிய நபர்கள் குறித்து எதுவும் தெரியாத நிலையில், குறிப்பிட்ட நபரை செவிலியர் ஒருவர் ஹீரோ போன்று காப்பாற்றியுள்ளார்.
படுகாயமடைந்த நபர் விழுவதை அதுவழியே சென்றுகொண்டிருந்த செவிலியர் Abigail Bamber கண்டுள்ளார்....
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்ததாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவன தகவல் மேலும் கூறியுள்ளது.
மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி (11,300 மீட்டர்) உயரத்தில், இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக...
சுவிட்சர்லாந்தில் 71 வயது மூதாட்டி ஒருவர் தம்மைவிட 50 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தது நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வோட் மண்டல நீதிமன்றம் இந்த திருமணத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்த முடிவை மூதாட்டி ஏற்க மறுத்ததுடன், தாம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும், தம்மை விட 13 வயது இளையவரான கமரூன் நாட்டவர்...
தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூரும் தினம் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற மைதானத்திலுள்ள படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் கலந்து...
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்...
சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிஸ் எனக்கூறிக்கொண்டு இளம்பெண் ஒருவரிடம் ரூ.30 லட்சத்தை பறித்த நபரை நூதன திட்டம் வகுத்து பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிஸின் சூரிச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இளம்பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துள்ளார்.
அப்போது, வெளியே பொலிஸ் உடுப்பில் இருந்த நபர் ஒருவர் ‘வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்து பணத்தை திருடி செல்வதால், உங்களுடைய பணத்தை பத்திரப்படுத்துங்கள்’ எனக்கூறியுள்ளார்.
இதனை உண்மை...
அரசாங்கம் போர் வெற்றியை இழிவுபடுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்ர்.
உலகின் பயங்கரமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த நாளைக் கொண்டாடுவதில் தவறில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 310,000 சாதாரண மக்களை படையினர் மீட்டு எடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாராட்டியிருந்தது.பாராட்டுக்குரிய மனிதாபிமான மீட்புப் பணியாகவே உலக அரங்கில் கருதப்பட்டது.
இந்தப் போரில் ஆயிரக் கணக்கான...
23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார்.
இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்.
கனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது 3 நண்பர்களுடன் விளையாட்டு போட்டி ஒன்றினை பார்த்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இரவு 11 மணியளவில் Rexdale என்ற பகுதியில் கார் சென்றபோது, திடீரென கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
காரை...
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவூன்ஜீன் தோட்டத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை திருடி சென்று கொண்டிருந்த வேளையில், குறித்த முச்சக்கரவண்டியினை நீர் வழி மின்சார கால்வாயில் இட்டுச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் முச்சக்கர வண்டியை திருடி இரத்தினபுரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த...