களனி கங்கைக்கு அருகே வசிக்கும் அனைத்து மக்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப் பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் வரலாற காணாத ரீதியில் உயர்ந்து வருகிறது. வினாடிக்கு சாதாரணமாக 40 கனஅடி செல்லும் நீர் தற்போது 1500 கனஅடிக்கும் அதிகமாக செல்வதால் வெள்ளம் ஏற்பட கூடிய சத்தியம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எனினும், பலர் இன்னும் வெளியேற முடியாத...
மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சூழ்நிலைக்கு ஏற்ற கால்பந்தாட்ட வீரர் என மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் கூறியுள்ளார்.
ரொனால்டோ, பெர்குசனின் முன்னாள் சீடன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 2003 முதல் 2009 வரை மான்செஸ்டர் அணியில் விளையாடிய ரொனால்டோ பெர்குசன் கீழ் பயிற்சி பெற்றவர்.
அயர்லாந்தில் நடந்த கோல்ப் விளையாட்டு குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெர்குசன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, கால்பந்து...
கோஹ்லி அதிரடி ஆட்டத்தால் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 82 ஒட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஐ.பி.எல். லீக் தொடரின் 50வது லீக் போட்டி இன்று பெங்களூரில் நடந்தது. பெங்களூரில் மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நேரம் அதிகமானதால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர்...
உபர் கிண்ண பாட்மின்டன் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய பெண்கள் அணி இறுதியில் 2-3 என ஜப்பானிடம் தோல்வியடைந்துள்ளது.
சீனாவில் உள்ள குன்ஷான் நகரில், ஆண்களுக்கான தமாஸ் மற்றும் பெண்களுக்கான உபர் கிண்ண பாட்மின்டன் தொடர் நடக்கிறது.
பெண்களுக்கான உபர் கிண்ண போட்டியில் இந்தியா 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி நடந்த முதல் போட்டியில் இந்தியா பெண்கள் அணி 5-0 என அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.
17 ஆம் திகதி...
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் சப்ரகமுவ பகுதிகளிலேயே இவ்வாறான நிலை அதிகம் காணப்படுவதாகவும் பிரதி முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன்...
மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இந்த கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்.கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும்,...
விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ்- புனே அணிகள் மோதிய போட்டி நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் புனே அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டினாலும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி புனே அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்...
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 31 பேர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஆகஸ்டு மாதம் நடக்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அதிரடி காட்டி வரும் கோஹ்லி, டிவில்லியர் ஆகியோரை பேட்மேன்- சூப்பர்மேன் என்று சக வீரரான கிறிஸ் கெய்ல் பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்...
நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் நிவாரணப் பணிகளை இலகுபடுத்தும் பொருட்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுங்கட்சியின் சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அசாதாரண காலநிலை சீற்றத்தின் மத்தியில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பது கடினமாக இருப்பதன் காரணமாக அவசர கால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன் நிவாரணப்...
மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்டு மற்றும் ஸ்மார்போன் வருகையால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது.
இதனால்பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நோக்கியா தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தைமைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
இந்நிலையில் மொபைல் தயாரிப்புக்குதனக்கென ஒரு தனி இடத்தையும், தொழில்நுட்பத்திற்கானபேட்டன்களை வைத்துள்ளது நோக்கியா.
இதனை மூலதனமாகக் கொண்டு பின்லாந்து நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள HMD குளோபல் ஓய் என்னும் நிறுவனத்திடம் மொபைல் தயாரிப்பிற்காகத் தனது தொழில்நுட்பத்தைப் பகிர ஒப்புக்கொண்டு...