பெண்ணை துரத்திய கொலைகாரர்கள்… காப்பாற்ற முயன்ற பசுமாடு!.. நம்பமுடியாத உண்மை காட்சி!..
Thinappuyal -0
இந்தியாவில் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் பெண்ணை கத்தியால் தாக்கிய கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற பசுமாடு ஒன்று முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது சீமா குஜ்ஜர் என்ற இளம்பெண்ணை இரண்டு நபர்கள் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் குற்றுயிராக சரிந்த அந்த பெண்ணை தொடர்ந்து கத்தியால் தாக்கும் அந்த கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு பசுமாடு ஒன்று அந்த இருவர் மீது முட்டித்தள்ளியுள்ளது.
ஆக்ரோஷமாக பசுமாடு...
எதிர்பாராத விதத்தில் மிகக்குறுகிய நேரத்தில் கேகாலையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனவர்கள் பலர் தேடப்பட்டு வருவதாகவும் இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிவதாக அமைச்சர் கூறினார்.
மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் கல்வி போக்குவரத்து மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, புளத்கோபிட்டிய மண்சரிவில் ஆறு குடியிருப்புகள்...
சுறா மற்றும் பல கடல்வாழ் இனங்களில் காணப்படும் ஒரு குறித்த உள்ளாதியான ஜெல்லி, அவற்றின் இரைகளிலிருந்து வரும் மின் சமிக்ஞைகளை அறிய உதவுகிறது.
தற்போதைய ஆய்வுகளின் படி இதுவே இயற்கை உலகின் மிகச்சிறந்த உயிரியல் புரோத்தன் கடத்தியாகும்.
இது தொடர்பில் வாசிங்டன் பல்கலைக்கழக, பொறியியளாளர் Marco Rolandi கூறுகையில், ஜெல்லியின் இந்த புரோத்தன் கடத்துதிறன் மிக ஆச்சர்யமானது, இக் கண்டுபிடிப்பானது பிற்காலத்தில் மின் உணர் தொழிற்பாடு தொடர்பான ஜெல்லியின் மேலதிக ஆய்வுகளுக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216குடும்பங்களை சேர்ந்த 3 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் 332 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளம்...
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதால், அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை முடிவுக்கு வரும் வரையில் இது அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தனது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவையானது சரியாக முன்னெடுக்கப்படவில்லை...
சாண வண்டுகள்(Dung Beetle) அதனுடைய பெரும்பாலான காலங்களை சாணங்களை தேடுவதிலும், அதை உருண்டையாக்கி இரவு ஊட்டலுக்காக எடுத்துச் செல்வதிலும் செலவிடுகிறது.
இதில் நம்பமுடியாத விடயம் எதுவெனில், நீண்ட நாள் உணவு தேடலின் பின் அவை தம் இருப்பிடத்திற்குச் செல்ல, பழைய கால வான்வெளி வழிகாட்டலையே பயன்படுத்துகின்றன என்பதாகும்.
விஞ்ஞானிகள் இச் சாண வண்டுகள் வழிகாட்டலுக்காக தனித்துவமான நுட்பங்களை பயன்படுத்துவதை பல வருடங்களாக உணர்ந்திருந்தனர்.
ஆனால் அதை அவர்களால் சரியாக தெரிந்திருக்க முடியவில்லை. ஆனால்...
மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அரநாயக்க சென்றடைந்த ஜனாதிபதி, அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், கமாண்டோ படைப்பிரிவினரும் அரநாயக்கவில்...
தலாவ - தம்புத்தேகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
எனினும், நேற்று இரவு முதல் வட பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலாவ பிரதேசத்தில் இன்றும் வெள்ள நிலைமை காணப்படுகின்ற அதேவேளை, புகையிரத பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் குறித்த புகையிரத மார்க்கத்தை சீர்செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களின் வேகமானது மணிக்கு பத்து கிலோ மீற்றராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
சர்வதேச விண்வெளி ஆய்வகம் பூமியை 1 லட்சம் முறை வட்டமிட்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் அனைத்தும் இணைந்து பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை உருவாக்கி வருகின்றன.
கடந்த 1998ம் ஆண்டு முதல் விண்வெளி ஆய்வக கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு 2000ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் சென்று தங்கி பணியாற்றி வருகின்றனர்.
6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள்...
நாட்டில் பெய்து வரும் கனமழையில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், ஆறுகளில் உள்ள முதலைகள் வீடுகளுக்கு படையெடுத்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முதலைகள் வீடுகளுக்கு அருகில் வருவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
களனி பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இன்று காலை முதலை ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.