டயகம அகரகந்தை பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளாகியது. லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்தைக்கும் நாகசேனைக்கும் இடைப்பட்ட பகுதியில் 17.05.2016 இரவு இவ் விபத்து சம்பவித்துள்ளது.
கடும் மழை காலநிலையில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கெடுக்க முற்பட்டபோதே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாகவும் பயணித்தவர்கள் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
18.05.2016 அதாவது இன்றைய தினம் ஸ்ரீ சீதா, ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகே உட்பட பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டார்கள்.
படங்களும் தகவலும்:- பா.திருஞானம்
சிலாபம் - புத்தளம் பாதையானது வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதையின் தெதுறு ஓயாவிற்கு அருகில் உள்ள லுணு ஓய பாலத்தை சூழவுள்ள பகுதி வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதால் இதனூடாகப் பயணிக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை குறித்த பாதையில் இரண்டரை அடி உயரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால் மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை, அம்பத்தளையிலிருந்து தொட்லங்க வரையான பாதையும் நீரிழ் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக நிதி அமைச்சினால் கடந்த வாரம் தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 2014ஆம் ஆண்டின் பொருட்களின் சந்தையின் விலையும், 2016ஆம் ஆண்டில் சந்தையின் விலைவாசி தொடர்பிலுமே குறித்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொடர்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கமானது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய 2015 நவம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேடவர்த்தமானிக்கமைய கட்டுபாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்கள் பலவற்றிட்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் மே முள்ளிவாய்க்காலில் தமிழ் தேசத்தின் போரால் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசப்பிள்ளை குகன், அம்பாறை மாவட்டத்திற்காக உப தலைவர் முருகேசு வரதராஜன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும்...
இந்த விமானம் முற்பகல் 11.12 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்தும் விமான நிலையத்ததை சூழவுள்ள பொலிஸ், விமானப்படை மற்றும் வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஓமான் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட போதிலும் எந்த காரணத்திற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
அட்டன் கண்டி பிரதான பாதையில் இரண்டாவது நாளாகவும் போக்குவரத்து தடை
அட்டன் கண்டி பிரதான பாதையில் நாவலபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலதாழமுக்கத்தினால் போக்குவரத்து தடை செய்பப்பட்டிருந்த நிலையில் 18.05.2016 இன்றும் தொடர்ந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேனைக்கும் நாவலபிட்டிக்கும் இடையிலான மீப்பிட்டிய பகுதியில் பாரிய நில வெடிப்புடன் நிலம் தாழிறங்கிய நிலையில் 16.05.2016 மதியம் 12 மணீமுதல் பாதை புனரமைப்பு பணி நிமித்தம் போக்குவரத்து தடைசெய்பட்டது...
இன்றைய தினம் (19.05.2016) காலை 9.00 மணியளவில் அரசினால் படுகொலை செய்யப்பட்ட 144000இற்கும் மேற்பட்ட மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
உத்தியோகபூர்வமாக தீப்பந்தத்தினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்ததுவைத்ததுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா, கட்சித் தலைவர்கள், பொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும்...
ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாப் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் குண்டுவெடித்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சமயத்தில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில் 28 பேர் உடல் சிதறி...
பிரித்தானியாவில், 89 வயதான Alice Swale's என்னும் மூதாட்டியின் வீட்டில் நுழைந்து, அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிய Dwayne Hollingworth என்னும் இளைஞருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு மாத கால சிறை தண்டனை விதித்து Hull Crown நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
சம்பவத்தன்று முதுமை மறதியாலும், நீரிழிவு நோயலும் பாதிக்கப்பட்ட வந்த Alice Swale's வீட்டில் தனியாக இருந்துள்ளார், அப்போது இறைச்சி விற்பனையாளர் என்று கூறி...