சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கடும் போட்டிகளுக்கிடையே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது பிங்க் வைரம். இதுவரை ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு வைரங்களில் இதுவே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏலம் எடுப்பவர்களில் இருவர் இந்த வைரத்தை தமதாக்கிக்கொள்ள இறுதிவரை போராடியதாகவும் கடைசியில் 42.8 மில்லியன் டொலர்களுக்கு தொலைப்பேசி வாயிலாக ஆசியாவை சேர்ந்த ஒரு வணிகர் அந்த வைரத்தை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரத்தை ஏலம் எடுக்கும் பொருட்டு அந்த வளாகத்தில் 150 பேர் ஆர்வமுடன்...
கனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர் குறிப்பிட விரும்பாத 23 வயதான இளம்பெண் ஒருவர், கடும் மூடுபனி பொழியும் இரவு நேரத்தில், தனது வழிகாட்டும் GPS மீது அதிகமாக நம்பிக்கை வைத்து காரை ஓட்டியுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எதிரே வரும்...
உலகின் மிக அழகிய தீவுகளில் ஒன்றான தாய்லாந்தின் Koh Tachai தீவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடையிட முடிவு செய்துள்ளனர். சுற்றுலா பயணிகளால் இந்த தீவின் சுற்றுச்சூழலுக்கு பல ஆண்டுகளாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க தவறினால் மீண்டும் சரிசெய்வது முடியாத விடயமாக மாறும் என தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து Koh Tachai தீவில் சுற்றுலா பயணிகளை இனிமேல் அனுமதிப்பதில்லை...
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை டுவிட்டரில் கிண்டலடித்து விமர்சனம் செய்தவருக்கு அவரது மனைவியும், விளையாட்டு தொகுப்பாளினியுமான மாயண்டி லன்சர் பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி பவுண்டரி கோட்டுக்கு அருகில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். இதனால் அவரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், இந்த கேட்ச்க்கு பிறகு ஸ்டூவர்ட் பின்னி மாயண்டி லன்சருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள தகுதியானவர்...
சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து நீண்டகாலமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய புடவை வியாபாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கிராமப் புறங்களில் வீடுவீடாகச் சென்று சாறி, சல்வார் மற்றும் இன்னோரன்ன ஆடைகளை விற்பனை செய்து கொண்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்தக் கைது இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ்...
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப், புனே இழந்துள்ள நிலையில், எஞ்சிய 6 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 9-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 49 ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இன்னும் 7 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதியாக இறுதி செய்யவில்லை. டோனி தலைமையிலான ரைசிங் புனே, முரளிவிஜய் தலைமையிலான...
எதிர்வரும் ஜுன்11 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன்போது இந்திய-ஜிம்பாப்வே அணிகள் மூன்று ஒரு நாள் போட்டியிலும், மூன்று 20 ஒவர் போட்டியிலும் விளையாடவுள்ளனர். குறித்த சுற்றுப்பயணத்தில் இந்திய நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கு ஒய்வு அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இடைவிடாத கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வரும் கோஹ்லி, ரோஹித்,...
டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் புனே அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ்அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற புனே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20...
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்த அணி போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கு போதிய வருமான அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இலங்கையில்...
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111(மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சையை முன்னிட்டு ஹட்டனில் இலவச செயலமர்வு எதிர்வரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111(மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சையை முன்னிட்டு இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் இலவச செயலமர்வை எதிர்வரும் யூன் 4 ஆம் திகதி ஹட்டனில் நடத்த தீர்மானித்துள்ளது. இவ்வமர்வில் பல்கலைகழக மற்றும் கல்வித் துறைசார் நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர். இச்செயலமர்வில் பங்கு பற்றுனர்கள் முன் கூட்டியே பதிவு செய்துகொள்ளவேண்டும் எனவும் சகல...