தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தினால் கொஞ்சம் அச்சத்திலேயே தான் உள்ளனர். எப்போது யார் கையில் சிக்குவோம், என்ன ’மிமி’யெல்லாம் உருவாக்கி கலாய்த்து எடுப்பார்கள் என அச்சத்திலேயே தான் இருப்பார்கள்.
ஆனால், விக்ரம் என்ற நடிகனுக்கு மட்டும் தான் ஹேட்டர்ஸ் என்பதே இல்லை, அந்த அளவிற்கு இவரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் இவர் வாக்களிக்க வராதது பல தரப்பு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்,...
பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை வஜிரராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 2015ம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறிப் பத்திர மோசடிகளினால் நாட்டில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவும் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தை மறைத்துக் கொள்ளவும்...
அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் குறித்து இன்னும் எந்த ஒரு செய்தியும் வரவில்லை.
எப்போதும் போல் மௌனமாக படப்பிடிப்பு ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அஜித் வாக்களிக்க வந்த போது பல ரசிகர்கள் அவரை பார்க்க திரண்டனர்.
அப்போது அஜித்தின் புதிய லுக்கை கண்டு ரசிகர்கள் அசந்தனர். பில்லா படத்தில் வந்த ஸ்டைலிஷ் அஜித் போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், எங்களுக்கு தல-57...
விஜய் சேதுபதி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர். இவர் படம் வெற்றியோ, தோல்வியோ ரசிகர்கள் எப்போதும் இவரை தலையில் தூக்கி கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படம் றெக்க, இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன்நடிக்கின்றார்.
இந்த படத்தின் மூலம் முழு நீள கமர்ஷியல் நாயகனாக விஜய் சேதுபதி அவதாரம் எடுக்கின்றார். மதுரை பின்னணியில் கதை நடப்பது போல் கூறப்படுகின்றது.
மேலும், விஜய் நடித்த கில்லி படத்தை போன்றே...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாங்குளம் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுக்காக எத்தன ரிஸ்க் வேண்டும் என்றாலும் எடுப்பார். இந்நிலையில் அடுத்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து சம்மந்தப்பட்ட கதைக்களம் என நாம் முன்பே கூறியிருந்தோம்.
விஜய் கிராமத்து கதைகளில் நடிப்பது இதுவே முதன் முறையாம், கடந்த சில வருடங்களாக நகர்ப்புற கதையில் மட்டும் நடித்து...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விடேச கருத்தரங்கு எதிர்வரும் 29, 30ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கருத்தரங்கு இடம்பெறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இந்த படத்தின் 40 நாள் வசூலை கேட்டால் தலை சுற்றி போகும்- விஜய், அஜித்தால் கூட முடியவே முடியாது
Thinappuyal -
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், இப்படி ஒரு வரவேற்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் வெளிவந்த ஜங்கிள் புக் திரைப்படம் இந்தியாவில் வெளிவந்த 40 நாட்களில் ரூ 250 கோடி வசூல் செய்துவிட்டது.
இந்த வருடத்திலேயே இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் இது தான், பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என சொல்லப்படும்விஜய், அஜித் கூட இந்த சாதனையை நெருங்க பல வருடம்...
இத்தாலியின் உதவி வெளியுறவு அமைச்சர் செனட்டர் பெனேடெட்டோ டெல்லா வெடோவா இலங்கை வந்துள்ளார்.
நேற்று இலங்கை வந்த அவர் நாளை வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
2006ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியின் உயர் அரசியல்வாதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.
எனவே உதவி வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
அவர், இலங்கையில், சக்திவளத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மூலோபாய அபிவிருத்தித்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கிறார்.
இந்தநிலையில் இத்தாலிய பிரதியமைச்சருடன் 4 பேர்...