தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் கையில் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளது. இந்நிலையில் Indian Music Academy இந்தியாவில் சிறந்த 10 இசையமைப்பாளர் என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் தமிழகத்திலிருந்து ரகுமான், இளையராஜா, யுவன் ஆகிய மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ராஜா, ரகுமான் எப்போதும் இதில் இடம்பெறுவது தான் என்பதால், யுவன் இந்த கருத்துக்கணிப்பில் டாப்-10க்குள் வந்தது அவருடைய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் உள்ள கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்களின்ஒரு குழுவினர் மாநகர ஆணையாளரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேல்மாகாண ஆளுநர் கே சி லோகேஸ்வரனிடம் மனு ஒன்றை நேற்றுகையளித்துள்ளனர் மாநகரசபையில் உள்ள 53 உறுப்பினர்களில் 47பேர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்குகின்றனர். ஆணையாளர் வி கே ஏ அனுர ஏதேச்சையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியே இந்தகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வெள்ளத்தினால்...
கச்சதீவில் புதிய தேவாலயம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் மத்திய அரசாங்கம் பாரமுகமாக இருப்பதை கண்டித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. தேசிய மீனவர் சங்க தலைவர் எம்.இளங்கோவின் கருத்துப்படி, யாழ்ப்பாண ஆயரின் விருப்பப்படியே கச்சதீவில் தேவாலயம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். எனினும் இதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுமானால் அது...
தமிழரல்லாத ஒரு நாட்டில் முதல் முறையாக, தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடோர் நாட்டின் தலைநகர் கியுறரோவில் மிகவும் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இம்மாதம் (மே) 18ஆம் நாள் நினைவு கூரப்படவிருக்கின்றது. ஈக்குவடோர் நாட்டின் பூர்வீகக் குடிகளின் பிரதான அமைப்பான ஈக்குவடோர் பூர்வீகக் குடிகளின் அறக்கட்டளை (Fundación Pueblo Indio del Ecuador - Indigenous People's Foundation in Ecuador) எனும் அமைப்பின் அழைப்பின்பேரில் உலகின் பல பாகங்களிலிருந்தும்,...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பார் காஜல் அகர்வால். விஜய், சூர்யா, மகேஷ் பாபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஹிந்தியில் Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பின்போது நாயகன் ரன்தீ்ப் ஹுடா திடிரென காஜலை கட்டியணைத்து லிப்லாக் முத்தம் கொடுத்து விட்டார். இதை சற்றும் எதிர்பாராத காஜல் அவரிடமிருந்து விடுவித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இதனால்...
கல்வி அமைச்சின் அனுசரணையில் கண்டி குருதெனியவில் ஆசிரியர்களுக்கான வதிவிட செயலமர்வு ஒன்று நடத்தப்படுகிறது. நாளையும் நாளை மறுதினமும் இந்த செயலமர்வு குருதெனியவில் உள்ள கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், நுவரெலிய, கம்பளை, கொத்மலை மற்றும் ஹட்டன் வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 40 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். தோழில் வழிகாட்டல் என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெறுவதாக குருதெனிய வள நிலைய உதவி முகாமையாளர் எம் தங்கராஜ் அறிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊறுபொக்க - ஈகொட பிரதேசத்தில் வைத்து இந்த நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது அதில் தெய்வச்சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் பல இருந்ததாகவும்,நோயாளி ஒருவருக்கு தெய்வப் பரிகாரம் செய்து குணப்படுத்ததுவதற்கே தாம் இதனைக் கொண்டு செல்வதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் புதையல் தோண்டுவதற்கே குறித்த பொருட்களை முச்சக்கரவண்டியில்கொண்டு செல்வதை அறிந்து இவர்களை கைது செய்து...
மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்...
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி சளி, காய்ச்சல் குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிக்கு நாட்டமில்லை என்பது நேற்று தெளிவாகியுள்ளது. நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, சம்பிக ரணவக ஆகிய மூவரும் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்கள். முன்னைய அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறித்த அமைச்சரவைப்...