வத்தளை - அவரகொட்டுவ பிரதேசத்தில் வெள்ளநீரில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் வெள்ளநீர் காணப்பட்ட வேளை ரெஜிபோம் பெட்டி ஒன்றில் ஏறி சிறுவர்கள் விளையாட முயன்ற போதே நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறுவர்களின் சடலம் தற்சமயம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. ' நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌றி‌ல் ‌சி‌றிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும். எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம். எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வந்தால் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம். ...
குழ‌ந்தை பெ‌ற்ற ப‌ெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம். தசைவலி...
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச்...
  யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மூன்று தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தலைமை நிதிபதி ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சம்பந்தப்பட்ட தனியார் காணிகளை ஸ்ரீலங்கா...
  இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் அஞசலி செலுத்தினார். நேற்று நாடாளுமன்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மோதலின்போது புதைக்கப்பட்ட கன்னிவெடிகளால் பாதிக்கப்பட்டு தங்கள் உடல் அவையங்களை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க...
  முள்ளிவாய்க்கால் இறுதியுத்ததில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை நந்திக்கடலிற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.  
இலங்கையில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழினத்துக்கெதிராக இலங்கைஅரசாங்கமும் சர்வதேச சமூகமும் பார்த்திருக்க மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்என சர்வதேசத்தால் வரையறை செய்யப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகள், பாலியல்வன்முறைகள், யுத்த குற்றங்கள் புரியப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ளஇந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கும்பேரிழப்புக்களுக்குமான நியாயத்தை கோரி நிற்கின்றோம் . இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது எறிகணைவீச்சுகள், பல்குழல் எறிகணை தாக்குதல்கள், தடை செய்யப்பட்டகொத்துக்குண்டுத் தாக்குதல்கள், விமான...
போகவாத்தை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் ராவனாங்கொடைக்கும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. போகாவத்தைக்கும் ராவனாங்கொடைக்கும் இடையில் போகாவத்தை தேயிலை தொழிற்சாலைக்கருகில் 17.05.2016.இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் இரவு முதல் தலவாகலை மற்றும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு. ராமசந்திரன்