பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவே அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை வஜிரராம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
2015ம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறிப் பத்திர மோசடிகளினால் நாட்டில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யவும் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தை மறைத்துக் கொள்ளவும்...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாங்குளம் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
"எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.."
என்று சற்று முன்னர் இன அழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை ஒன்பது மணியளவிலிருந்து வடமாகாணசபையால்...
வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே கொழும்பு...
சிறிலங்காவில் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 16 பேர் காணாமற் போயுள்ளனர்.
புலத்கொஹுபிட்டிய, என்ற கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் காணாமற்போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை அறிவித்துள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவி மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும், மோசமான காலநிலையால், மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில், ஆறு நிரைகளாக இருந்த வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் பல முற்றாகவே புதையுண்டு போனதாக அனர்த்த...
முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின், முன்னேற்றம் குறித்து, விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம், நிராகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை பொருத்தமான இடம் அல்ல என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதனை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
எனினும்,...
சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடும் மழை,காற்று, வெள்ளம், நிலச்சரிவு, மின்னல், போன்ற இயற்கை அனர்த்தங்களினால், 68 வீடுகள் முற்றாக அழிந்திருப்பதுடன், 1300 வீடுகள் சேதமடைந்துள்ளன.
சுமார் 160,000 பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, கொழும்பு, காலி,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பினை முற்று முழுதாக நீக்கும் நோக்கில் எஞ்சியிருந்த 53 படையினரை நீக்க முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நேற்றைய தினம் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பினை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து இவ்வாறு, இராணுவப் பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் காலை...
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் Della Vedova இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக இலங்கைள வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
2006ம் ஆண்டு அப்போதைய இத்தாலி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இத்தாலிய உயர் மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த...
யாழில் புதிதாக யாழ்.கொட்டடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலை கட்டடத்தினால் அதன் அயலில் உள்ள 150 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளன.
யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் கொட்டடி J/80 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனாட்சி குளம் பகுதியை சேர்ந்த மக்களே அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிறைச்சாலை புதிதாக நிர்மாணிக்கும் போது அப்பகுதி மண் போட்டு மேட்டு நிலமாக மாற்றிய...