பலத்த காற்றுடன் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் மழை தொடர்கிறது, அத்தோடு சங்கானைப்பகுதியில் இன்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையோடு பல மீன்களும் விழுகின்றது.
இந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காக மக்கள் படை எடுப்பதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர்இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என கிளிநொச்சி.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த இரண்டு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் ...
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், மதுரை, தேனி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.
மேலும் சென்னையில் நேற்று விடிய விடிய இடி...
ரயில் ஒன்று சமிக்ஞைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் கடவையின் பாதுகாப்பாளர் பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.
புகையிரத கடவையின் பாதுகாப்பாளர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றிருந்த போது ரயில் ஒன்று வந்துள்ளது.
இதன்போது சமிக்ஞை கிடைக்காததால் குறித்த ரயிலின் சாரதி ரயிலை நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததுடன் ஊதுகுழலையும் ஒளிக்கவிட்டுள்ளார்.
அவ் ஓசையை கேட்டு கழிப்பறையிலிருந்து அவசரமாக ஓடிவந்த ரயில்கடவை காப்பாளர் பதற்றத்தில், சிகப்பு மற்றும் பச்சை...
நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வாழும் கலை நிறுவன தலைவர் சுவாமி ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதன்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
ஸ்ரீலங்காவில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இதனூடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை...
தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு, பொலிஸாரும் உஷார் நிலையில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு, அலுவலகங்கள் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.
அவசர இலக்கம்: 119
பொலிஸ் மா அதிபர் உதவி மையம்: 011-24444480/ 011-2444483
பொலிஸ் மா அதிபர் கட்டளை மத்திய நிலைய அதிகாரி: 011-2854931/ 011-2854864
குற்றப்பிரிவு நடவடிக்கை மையம்: 011-2473804
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்கின்ற அடை மழை காரணமாக சில பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இரண்டு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சந்திரசேகரன் நிரோஜன் தெரிவித்தார்.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 24 அடியிலிருந்து 28 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது. உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலத்திலிருந்து 16 அடி 5 அங்குலமாகவும்...
எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விடுதலை செய்யபட்டுள்ள மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக நடவடிக்கையினை யாழ் இந்திய துணைதூதரகம் மேற்கொண்டு வருகிறது.
குறித்த...
கிராமப் பகுதிகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வெள்ளை வான் கடத்தல்களும், கைதுகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தன்னையும் ஒருமுறை வெள்ளை வானில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் கைது நடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இதுகுறித்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்கள்...
தொடர்ந்து பெய்து வரும் மழை கால நிலையில் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் நீர் வீழ்ச்சிகளிலும் நீர்அதிகரித்து கானப்படுகின்றது.
பெய்த அடை மழையில் சென்கிளேயர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சீயிலும் நீர் அதிகரித்துள்ளது காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் காசல்ரீயில் நாற்பது அடியிலிருந்து ஐம்பது அடியாகவும் மவுசாகலையில் முப்பது அடியிலிருந்து நாற்பது அடியாகவும் பத்து அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் 17.05.2016 மழை வீழ்ச்சி குறைந்துள்ள...